அகில இலங்கை பரதநாட்டியப் போட்டி – மாகாண மட்டத்தில் யா/மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலய மாணவர்கள் முதலிடம்! அகில இலங்கை பரதநாட்டியப் போட்டிய...
அகில இலங்கை பரதநாட்டியப் போட்டி – மாகாண மட்டத்தில் யா/மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலய மாணவர்கள் முதலிடம்!
அகில இலங்கை பரதநாட்டியப் போட்டியின் மாகாண மட்டப் போட்டியில், யாழ்ப்பாணம், யா/மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலய மாணவர்கள் சிரேஷ்ட பிரிவில் தப்பாட்டப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இவர்களது, இச்சாதனையைப் பாடசாலைச் சமூகம் மாணவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்து நிற்கின்றது.
இச்சாதனையைப் பாராட்டுவதுடன், போட்டியில் பங்கேற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும், அவர்களை வழிநடத்திய ஆசிரியர்களுக்கும் மாதகல் இணையதளம் தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
மாணவர்கள் எதிர்காலத்திலும் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மேலும் பல வெற்றிகளையும் சாதனைகளையும் பெற்று, எமது பாடசாலைக்கும் மாதகல் மண்ணுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகின்றோம்!


