வாழ்த்துச் செய்தி யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சுவேந்திரன் சகித் அவர்கள், 2025 ஆம் ஆண்டு சிதம்பரா கணிதப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக...
.png)
வாழ்த்துச் செய்தி
யாழ் இந்துக் கல்லூரி மாணவன் சுவேந்திரன் சகித் அவர்கள், 2025 ஆம் ஆண்டு சிதம்பரா கணிதப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றமை பெருமைக்குரிய சாதனையாகும். போட்டியின் பெறுபேறுகளில் அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
இந்த சிறப்பான வெற்றியின் மூலம் லண்டனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு, தனது சாதனைக்கான விருதையும் பெற்றுக்கொண்டார். சிதம்பரா கணிதப் போட்டியின் சிறந்த மாணவர்களை கௌரவிக்கும் இந்த விழா 2025 ஜூலை மாதம் நடாத்தப்பட்டது.
அவரது இந்த மகத்தான சாதனை, யாழ் இந்துக் கல்லூரிக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும்,எமது மாதகல் கிராமத்தைப் பூர்வீகமாக கொண்டவர் என்பதால் இம் மாணவனின் வெற்றி எம் மண்ணுக்கும் பெருமை சேர்ந்துள்ளது.
சுவேந்திரன் சகித் அவர்களுக்கு எமது இதயம் கனிந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
அவரது எதிர்கால கல்விப் பயணத்தில் மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச சாதனைகளைப் படைத்து உயர வாழ்த்துகிறோம்.
.png)
.jpg)
.jpg)
.png)
