மாதகல் நுணசையம்பதி திருவருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி தேவஸ்தான பாலஸ்தாபன மஹா கும்பாபிஷேகம் முருகன் அடியார்களே! சிவபூமி ஸ்வர்ண பூ...

.jpeg)
.jpeg)
மாதகல் நுணசையம்பதி திருவருள்மிகு வள்ளி தேவசேனா சமேத முருகமூர்த்தி தேவஸ்தான பாலஸ்தாபன மஹா கும்பாபிஷேகம்
முருகன் அடியார்களே!
சிவபூமி ஸ்வர்ண பூமி என திருமூலரால் கூறப்பட்டதும். இவ்விலங்காபுரியின் வடபால் சைவமும், தமிழும் தழைத்தோங்கும் யாழ்ப்பாண மேற்றிசையில் சீரும் சிறப்பும் மிகுந்த மாதகல் கிராமத்தில் நுணசையம்பதியில் வேண்டுவோர் வேண்டுவதை ஈயும் கருணைமிகு கடம்பவேல் முருகப் பெருமானு க்கும் பரிவார மூர்த்திகளுக்கும் பாலஸ்தாபனம் செய்து எம்பெருமானின் மூலஸ்தான மண்டப உட் பிரகாரம் புனருத்தாரணம் செய்யப்பட்டு புதிதாக குபேர வாசல் கோபுரம். கடம்பவேல் பெருமானின் பச்சிம வாசல் கோபுரம். கடம்ப மரத்தடி மண்டபங்கள் அழகிய சிற்ப கருங்கல் வேலைப்பாடுகளோடு. கவினுறு வர்ணம் தீட்டி அழகொளிர மிளிரச் செய்து பக்தி மணம் பரவ அடியார்கள் உள்ளத்தில் முருகப் பெருமான் திருவருள் பாலித்துள்ளார்.
இப்பெருங் கைங்கரியத்தின் பூர்வாங்க நிகழ்வாக முருகனருளோடு நிகழும் மங்கலகரமான பராபவ வருடம் சித்திரை மாதம் 21ம் நாள் (04.05.202G) திங்கட்கிழமை அனுஷ நட்சத்திரமும், திருதி யைத் திதியும், சித்த யோகமும் கூடிய சுபமுகூர்த்த வேளையில் காலை 6.00 மணி முதல் 6.40 மணி வரையுள்ள மேட லக்ன சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இவ் வேளையில் கிரியாகாலங்களிலும் அடியார்கள் வருகை தந்து தரிசித்து பால், தயிர், இளநீர், பூ. பூமாலை உபகரித்து இறையருள் பெற்றுய்வீர்களாக.
= கிரியாகால விபரம்
சித்திரை மாதம் 20ம் நாள் ஞாயிற்றுக்கிழமை (03.05.2026) காலை கோதூளிகா முகூர்த்தத்தில் காலை 6.00 மணிக்கு கர்மாரம்பம் விநாயகர் வழிபாடு, அனுக்ஞை. தேவ அனுக்ஞை பிராமண அனுக்ஞை. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி சூர்யாக்கினி சங்கிரகணம், கங்கா தீர்த்தம். திருமுறை பாராயணம். விபூதி பிரசாதம் வழங்கள் மாலை 4.00 மணிமுதல் விநாயகர் வழிபாடு, மிருத் சங்கிரகணம் அங்குரார்ப்பணம், ரக்ஷசாபந்தனம், கடஸ்தாபனம். கலாகர்சணம். பேரசலனம். யாக பூஜை ஹோமம். இரவு -8.00 மணிமுதல் 9.00 மணிக்கிடையில் தீபஸ்தாபனம், விம்பஸ்தாபனம் இடம்பெறும். விசேட திரவியாகுதி. பூரணாகுதி, திருமுறை பாராயணம், விபூதி பிரசாதம் வழங்கல்.
சித்திரை மாதம் 21ம் நாள் திங்கட்கிழமை (04.05.2026) அதிகாலை 4.30 மணிமுதல் விநாயகர் வழிபாடு.
விம்பசுத்தி ஸ்பஸ்சாகுதி விசேட திரவிய அபிசேகம், மஹா பூர்ணாகுதி, யாகதீபாராதனை, வேதஸ்தோத்திர ஆசீர்வாதம், திருமுறை பாராயணம், மங்கல கோஷம் முழங்க கும்பம் எழுந்தருளல் மூர்த்தி சம்ஜோஜனம், பாலஸ்தாபன கும்பாபிஷேகம், தச தரிசனம், தீபாராதனை. விசேட பூஜைகளுடன் ஆசியுரை, திருவருட்பிரசாதம் வழங்கல்.
பிரதிஷ்டா பிரதம குரு ஆலய குரு
சிவஸ்ரீ. ந.கஜநேசக்குருக்கள்
(மேற்படி தேவஸ்தானம்)
முக்கிய குறிப்பு : மிக விரைவில் மஹா கும்பாபிஷேகம் நிகழ தீர்மானித்திருப்பதனால் அடியார்கள் பண உதவி, பொருளுதவி, சரீர உதவி புரிந்து முருகனுடைய அரும்பணி நிறைவேற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மாதகல் 077 1321954
இங்ஙனம்
ஆலய ஆதீனகர்த்தா
க.பாலசுப்பிரமணியம் புருஷோத்தமன்
