மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மேரி மாகிரெட் அவர்கள் 07.04.2026 புதன்கிழமை அன்று தனது நூற்றி இரண்டாவது வய...

மாதகல் மேற்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை மேரி மாகிரெட் அவர்கள் 07.04.2026 புதன்கிழமை அன்று தனது நூற்றி இரண்டாவது வயதில் இறைபதமெய்தினார். அன்னாரின் இறுதி வழிபாடு 10.04.2026 வெள்ளிக்கிழமை பி.ப 02.00 மணிக்கு அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும். தகவல் குடும்பத்தினர்
"அகவை 100 கடந்த மூத்த குடிமகளுக்கு கௌரவம்" https://www.mathagal.net/2025/11/100.html மாதகல் மேற்கு யா/152 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சூசைப்பிள்ளை மேரி மாக்கிறேட் அவர்களின் 11.11.2025 அன்று அவரது இல்லத்திற்குச் சென்று, அவரைச் சந்தித்து, நூறாண்டு வாழ்க்கை நிறைவை முன்னிட்டு சண்டிலிப்பாய் @பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேசசெயலகம் சார்பில் மதிப்பளித்து கௌரவித்தனர். இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் மூத்த குடிமகளின் ஆரோக்கியம், நீண்ட ஆயுள், மனநிம்மதி நிறைந்த வாழ்வை பிரார்த்தித்தனர். #மாதகல்_மேற்கு #மூத்தகுடிமகள்_ #நூறாண்டு_வாழ்வு #வாழ்க_வளமுடன் மாதகல் இணையத்தளமும் எம் மூத்த குடிமகளுக்கு வாழ்த்துக்களை கூறிக்கொள்கின்றது.
