“சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம அங்குரார்ப்பண நிகழ்வு “ Clean Srilanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், "தேசத்தைக் கட்டியெழுப்பும் வ...
“சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம அங்குரார்ப்பண நிகழ்வு “
Clean Srilanka தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், "தேசத்தைக் கட்டியெழுப்பும் வளமான கிராமம்" சமூக உற்பத்தித்திறன் மாதிரிக் கிராம திட்டத்திற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்றைய தினம் (16.03.2026) வலி தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில், J /150 மாதகல் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவில், மு.ப 11.15 மணியளவில் சகாயபுரம் கிராமத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மதிப்புக்குரிய சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திரு.குமாரசாமி பிரபாகரமூர்த்தி அவர்கள் தலைமை வகிக்க பிரதேச ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்து இருந்தார்.
ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மங்கல விளக்கேற்றப்பட்டதுடன், ஆசியுரையினை சகாயபுரம் சகாயமாதா தேவாலய பங்குத்தந்தை வணக்கத்திற்குரிய ஞானசீலன் ஞானரூபன் அடிகளார், மற்றும் இந்து மதகுரு வணக்கத்துக்குரிய சிவமனோகர சர்மா அவர்கள் வழங்கியிருந்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வலிதென்மேற்கு பிரதேச சபையின் கௌரவ உப தவிசாளர், வலிதென்மேற்கு பிரதேச சபையின் செயலாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், பிரஜாசக்தி தலைவர்கள் கிராம மட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இந்நிகழ்வில் சகாயபுரம் கிராமம் தெரிவு செய்யப்பட்ட முறை தொடர்பிலும் 2025-2027 வரையான காலப்பகுதியில் இக்கிராமத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் பிரதேச செயலாளரால் தலைமை உரையில் தெளிவுபடுத்தப்பட்டதுடன். சமூக உற்பத்தித்திறன் அபிவிருத்தி திட்டம் (CPDP) மதிப்பிற்குரிய பிரதேச செயலாளரினால், பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து குறித்த மாதிரி கிராம திட்டத்திற்குரிய பெயர்ப்பலகை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கௌரவ தலைவரினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வின் இறுதியில் கிராம மக்களின் பங்கேற்புடனான சிரமதானமும் மேற்கொள்ளப்பட்டது.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
