சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த முன்மாதிரி! இன்றைய தினம் 02/08/2026 Evangelical Church of Christ – Mathagal West அமைப்பினரால்,புதிதாக கட்டப்...
சமூகப் பொறுப்புணர்வின் சிறந்த முன்மாதிரி!
இன்றைய தினம் 02/08/2026 Evangelical Church of Christ – Mathagal West அமைப்பினரால்,புதிதாக கட்டப்பட்டு வரும் மாதகல் மேற்கு J/152 கிராம அலுவலர் பிரிவு கிராமச் செயலக வளாகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டு, வளாகம் முழுமையாகத் துப்புரவு செய்யப்பட்டது.
இந்நற்பணியில் தன்னார்வத்துடன் பங்கேற்று, சுற்றுச்சூழல் தூய்மைக்கும் சமூக நலனுக்கும் பங்களித்த தேவாலய நிர்வாகத்தினருக்கும், அனைத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
"சுத்தமான சூழல் – ஆரோக்கியமான சமூகம்" என்ற உயரிய நோக்கை முன்னெடுத்துச் செல்ல அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
நன்றி தெரிவித்தல் மாதகல் மேற்கைப் பூர்வீகமாகவும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய சமூகப்பற்றாளன் அன்பும் மரியாதையும் உடைய நன்கொடையாளர் பூ. அன்பழகன் அவர்கள் மாதகல் மேற்கு கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கு..!
நன்றி தெரிவித்தல்
மாதகல் மேற்கைப் பூர்வீகமாகவும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய சமூகப்பற்றாளன் பூ. அன்பழகன் அவர்கள் மாதகல் மேற்கு கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கு 2ஆம் கட்ட நிதி வழங்கல்.
மாதகல் மேற்கைப் பூர்வீகமாகவும் புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வசிப்பவருமாகிய சமூகப்பற்றாளன் பூ. அன்பழகன் அவர்கள் மாதகல் மேற்கு கிராம சேவையாளர் அலுவலகம் அமைப்பதற்கு 2ஆம் கட்ட நிதி வழங்கல்.
*கட்டடப் புனரமைப்புக் குழுவின் அன்பான அறிவித்தல்*
நீண்ட காலமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாதகல் மேற்கு J/152 பிரிவுக்கான கிராமச் செயலக கட்டிடப் பணிகள்,
21.02.2026 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.
தற்போது கட்டிடத்தின் கூரை அமைக்கும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
மக்களின் ஒத்துழைப்பும் சமூக ஆர்வலர்களின் நிதிப் பங்களிப்பும் காரணமாக கட்டிடப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேற்படி கட்டிடப் பணிகள் முழுமையாக நிறைவடைய, இறைவன் அருளால் மிக விரைவில் நிறைவு பெற அனைவரின் தொடர்ந்த ஒத்துழைப்பையும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்.
உங்கள் ஆதரவும் பங்களிப்பும் எங்கள் சமூக முன்னேற்றத்தின் அடித்தளம் ஆகும்.
நன்றி.
– கட்டடப் புனரமைப்புக் குழு
மாதகல் மேற்கு (J/152)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpg)
