பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் முதலாவது வருடாந்த நிகழ்வாக " சிறு...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் முதலாவது வருடாந்த நிகழ்வாக " சிறுவர் சங்கமம்" ஞாயிறு 27-02-2026 அன்று மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுகள் அனைத்தும் மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சா. அருள்ஞானானந்தன் - ஞாணா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அருட்தந்தை திரு அ. அ. அமலராஜன் அவர்கள் [மாதகல் பங்குத் தந்தை], திரு சிவஸ்ரீ. ந. கஜநேசக்குருக்கள் அவர்கள், மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் அதிபர் திருமதி சுரேக்கா தயாபரன் அவர்கள், மாதகல் சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபர் திருமதி றமணி ஜெயந்தன் அவர்கள், மாதகல் நுணசை வித்தியாலயத்தின் அதிபர் திரு செ. லோகசவுந்தரன் அவர்கள், மாதகல் சென், யோசப் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி லுசின்டா தர்மினி பாலேந்திரன் அவர்கள், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சா, அருள்ஞானானந்தன் அவர்கள், செயலாளர் திரு மு. திருக்குமார் அவர்கள், கணக்காளர் திரு செ. சுபாஸ்கரன் அவர்கள், மற்றும் சங்க உறுப்பினர்கள், மாதகல் பாடசாலைகளின் ஆசிரியர்கள், முன்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். பிரதம விருந்தினராக வலிகாம வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜமுனா ராஜசீலன் [SLEAS-I ] அவர்களும், சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு தவபாலன் ரவிமோகன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கௌரவ விருந்தினர்களாக பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் திரு மு. ஞானசீலன் அவர்கள், ஜேர்மனியில் வசிக்கும் சமூக சேவையாளர் திரு பூ. அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இந்த நிகழ்வில், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் 19ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்பட்ட 5ஆம் வகுப்பு புலமைப்பரீட்சையில் 2025ஆம் ஆண்டு சித்தியடைந்த மாதகல் மாணவர்களின் கௌரவிப்பு விழா ஞாயிறு 27-02-2026 அன்று மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் நடைபெற்றது. 2025ம் ஆண்டு நடைபெற்ற 5ஆம் வகுப்பு புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து எமது மாதகல் கிராமத்திற்கு பெருமை சேர்த்த 6 மாணவர்கள் ஒவ்வொருவரிற்கும் பாராட்டுப்பட்டயம் வழங்கி கௌரவித்ததுடன், பத்தாயிரம் [10,000] ரூபாவும் அவர்களின் பெயரில் வங்கியில் வைப்பிலிடப்பட்டது. இம்மாணவர்களிற்கு கல்வி கற்பித்த ஆசிரியர்களிற்கும், அவர்களை வளர்த்தெடுத்த பெற்றோர்களிற்கும் இம்மாணவச் செல்வங்களிற்கும் எமது சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றது. சென் தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை - 4 மாணவர்கள் மாதகல் விக்னேஸ்வரா பாடசாலை - 2 மாணவர்கள் அத்துடன் 5 ஆம் வகுப்பு புலமைப்பரீட்சை மாணவர்களிற்கு மேலதிக, விசேட வகுப்புக்களை நடாத்திட 2017ஆம் ஆண்டிலிருந்து ஒரு இலட்சத்து இருபத்தையாயிரம் [1,25,000]ரூபா வரை வருடாந்தம் உதவி வருகின்றோம். பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் முதலாவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்பட்ட "சிறுவர் சங்கமம்" நிகழ்வில் மாதகல் முன்பள்ளி மாணவர்களிற்கு பரிசில்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்காக ஒரு இலட்சத்து முப்பதினாயிரம் [1,30,000]ரூபா வரை வழங்கப்பட்டது.அத்துடன், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினால் மாதகல் முன் பள்ளி ஆசிரயர்களிற்கான வருடாந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்காக ஒரு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் [1,32,000]ரூபா வழங்கப்பட்டது [11ஆசிரியர்கள் 12,000ரூபா].அதேவேளை மாதகலைச் சேர்ந்த திரு பொன்னம்பலம் அவர்கள் இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமூடாக ஒவ்வொரு மாணவரிற்கும் ஆயிரம்[1000] ரூபாவினை இந்நிகழ்வில் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.





.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

