"எங்கள் கிராமம் மாதகல்'' ஆக்கம் : சாந்தி அரவிந்தன், மொன்றியல், கனடா...!

எங்கள் கிராமம் மாதகல் நானிலங்களில் மருதநிலத்தையும், நெய்தல் நிலத்தையும் தன்னகத்தே கொண்டு செல்வச் செழிப்புடன் நிமிர்ந்து நிற்கும் எங்கள் கிரா...



எங்கள் கிராமம் மாதகல்
நானிலங்களில் மருதநிலத்தையும், நெய்தல் நிலத்தையும் தன்னகத்தே கொண்டு செல்வச் செழிப்புடன் நிமிர்ந்து நிற்கும் எங்கள் கிராமத்தின் அழகு சொல்லிமாளாது. பண்டத்தரிப்பு, சில்லாலை, மாரீசன்கூடல் தொல்புரம் ஆகிய கிராமங்களையும் வடக்கிலும், மேற்கிலும் பாக்குநீரிணைக் கடலையும் எல்லைகளாகக் கொண்டு விளங்கும் மாதகல் கிராமம் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். மாதகல் என்றால் பாணாகவெட்டிக் குளத்தின் அருகேயுள்ள ஆலயத்துக்கு இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கண்ணகை அம்மன் சிலையினை அடையாளமாகக் கூறலாம். அதாவது மாது கல்லாக (சிலை வடிவில்) அமர்ந்திருந்து அருள் புரிந்ததால் மாதகல் என்ற பெயர் வந்ததாக ஆன்றோர் கூறக் கேட்டுள்ளோம். பண்டத்தரிப்பிலிருந்து மாதகல் வரும் பாதையின் இருமருங்கும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் வயல்வெளிகளை நிரப்பிக் குலுங்கும் மிளகாய் செடிகளும், மரவள்ளிக் கன்றுகளும், புகையிலைச் செடிகளும், வெங்காயமும் பார்ப்போர் மனதைக் கொள்ளை கொள்ளவல்லன. புவனேசுவரி அம்மன் (கண்ணகை அம்மன் என்ற பெயர் ஆறுமுகநாவலரின் காலத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது) ஆலயத்தின் அருகில் பாணாகவெட்டிக் குளத்தில் ஒற்றைக் காலில் தவமிருக்கும் கொக்குகளையும் கண்ணால் அளந்துகொண்டே போனால் வானளாவ வளர்ந்திருக்கும் மாமரங்களைக் கொண்ட புனித வளனார் (St. Joseph M.V) மகாவித்தியாலயத்தைக் காணலாம். இந்தப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு 150 ஆண்டுகள் கடந்துவிட்டதை நம்பத்தான் முடியவில்லை. 1960 களில் இங்கிலீசுப் பள்ளிக்கூடம் என்றுதான் எங்களுக்குத் தெரிந்திருந்தது. அந்தக் காலத்தில் ஆங்கிலத்தில் கல்வி கற்பிக்கப்பட்ட பாடசாலைகளில் இதுவும் ஒன்று. எல்லோரும் மெச்சும் வண்ணம் யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்று நூலை எழுதிய மயில்வாகனப் புலவர் பிறந்த ஊர் எமது ஊரென நாமெல்லோரும் மார்தட்டிச் சொல்லலாம்.
எமதுாரில் சைவசமயத்தவர்களும், கிறித்தவர்களும் மதவேறுபாடின்றி ஒருங்கிணைந்து கோவில் திருநாள்களைக் கொண்டாடிமகிழும் அழகேதனி. நுணசை முருகமூர்த்தி கோவில் சித்திரை மாதத்தில் தொடங்கினால் 12 நாட்களும் பெரிய கொண்டாட்டம்தான். முக்கியமாகத் தேர்த் திருவிழாவைக் குறிப்பிடலாம். ஏனென்றால் காலை புவனேசுவரி அம்மன் ஆலயத்தில் ஏற்றிய காவடிகள் பிற்பகலில் தான் நுணசை முருகன் கோவிலில் இறக்கப்படும். இரண்டு கோவில்களுக்குமிடையில் காணப்படும் பிள்ளையார் கோவிலையும் தரிசித்தே எல்லாக் காவடிகளும் செல்லும். பால்காவடி, துலாக்காவடி, ஆட்டக்காவடி, தேர்க்காவடி, முள்ளுமிதி வடிக் காவடி, தாளக்காவடி இப்படிக் காவடிகள் பலப்பல. இடையே தண்ணீர்ப் பந்தல்களில் மோர்த்தண்ணீர் சர்க்கரைத் தண்ணீரைச் சுவைத்தபடி நாமும் முருகன் கோவிலைச் சென்றடைவோம். யாழ்ப்பாணத்திலுள்ள அத்தனை தவில் நாதசுவர வித்துவான்களும் மாதகல் மண்ணில் குவிந்திருப்பர். நாதசுவரக் கலைஞர்களில் பெண்களும் அடங்கியிருந்தது மேலும் சிறப்பு. என்னே! காலையில் உடுத்த பட்டுவேட்டி காவடியாட்டத்தில் கரை நைந்துவிடும் அளவுக்குக் காவடியாட்டம் களைகட்டும். 1970களுக்கு முற்பட்ட காலங்களில் பிள்ளையார் கோவிலில் சின்னமேளமும் நடைபெற்று வந்தது. நாமெல்லாம் விடிய விடிய சின்னமேள நடனமங்கைகளின் அழகிலும், அவர்களின் ஆட்டத்திலும் மெய்மறந்து இலயித்திருப்போம். வயல்களில் கிடைத்த வருமானத்தில் பாதியளவு திருவிழாக்களுக்கும் காவடிகளுக்குமே செலவாகிவிடும். ஆனால் அதில் கிடைக்கும் மகிழ்ச்சி கமக்காரருக்கு வேறெதிலும் கிடைக்காது. கடற்கரையில் அமர்ந்திருக்கும் கெபி எனப்படும் மாதாகோவிலுக்குச் சுற்றுப்பிரகாரத்துடன் மெழுகுதிரியும் கொண்டு சைவர்களும் செல்வார்கள். ஓரு மைல் துாரம் கடற்கரைக்குச் சென்று அங்கே நடைபெறும் பூசைகளில் கலந்து சிறப்பித்துவிட்டுச் சுற்றியுள்ள தற்காலிகக்கடைகளில் காப்புகள், மாலைகள் வாங்கி அணிந்துகொண்டு சூப்புத்தடி இனிப்பையும் சுவைத்தபடி அரட்டையடிக்கும் கும்பலில் நாமும் இணைந்திருப்போம்.
பெற்றோல்மக்ஸ் விளக்கின் வெளிச்சத்தில் நடமாடும் வண்டியைத் தள்ளிக் கொண்டுவரும் முஸ்லிம் பெரியவரிடம் பருப்பு, பகோடா வாங்கிச் சாப்பிட்டுவிட்டு அம்மாக்குழல்களைச் செவிடுபடஊதிக்கொண்டு வரும் தோழர்களையும் முறைத்துக்கொண்டு, தோழிகளுடன் கிண்டல் கேலிப் பேச்சுகளுடன் கும்மாளமடித்துக் கிளம்புவதை என்றுமே மறக்க முடியாது. அங்கே அலைகளின் தாலாட்டில் கட்டுமரங்களில் ஏறிப் பவனி வருவோரையும் கண்குளிரக் காணலாம். மாசி மாதத்தில் கடலன்னையின் மடியில் திரளும் முரல் மீன்கள் ஏராளம். வெள்ளிபோல் மின்னும் முரல் மீன்கள் துள்ளி விளையாடும் அழகினைப் பார்க்கக் கண் கோடிவேணும் என்று நீந்தத் தெரிந்தோர் சொல்லக் கேட்டிருக்கிறோம். குடதிசையில் கதிரவன் தன் ஒளிக்கற்றைகளைச் சுருக்கி இளைப்பாறும் மஞ்சள் வெயிலில் கடலுக்குப் போகும் கடலோடிகள் திரும்பி வருமளவும் அவர்களின் வரவுக்காக ஊரே திரண்டிருக்கும். ஏனென்று கேட்டால் அந்த முரல் மீனுக்குத்தானென்று சின்னக் குழந்தையும் கூறும். மாதகல் முரல் மீனுக்கு அத்தனை மவுசு. இதற்காக அயலுார்களில் இருந்து வருபவர்களுக்குக் கணக்கில்லை. மீன்சொதியும் சோறும் நாக்கை அள்ளும். அத்தனை உருசி. அண்மைக்காலங்களில் மாதகல் முரல் கனடா வரை வருகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உடன் மீனும், வயல்களில் அன்றே பறித்த மரக்கறியும், பத்தாயப்பெட்டியில் துாங்கும் நெல்லும், தென்னைமரம் கொடுத்த தேங்காயும் இருந்ததால் மாதகல் செல்வச் செழிப்புமிக்க கிராமமாக இருந்ததில் வியப்பில்லை. அத்தோடு பயறு, உழுந்து, எள்ளு போன்ற தானியங்களையும் சிறுபோகத்தில் விதைப்பதால் பயற்றந் துவையலுக்கோ, உழுத்தங்களிக்கோ, எள்ளுருண்டைக்கோ பஞ்சமில்லை. பனைமரத்திலிருந்து கிடைத்த நுங்கு, பனம்பழம் ஆகியனவும் பனங்கிழங்கு, புழுக்கொடியல், ஒடியல், பனாட்டும், வீடுவேயவும், வேலி அடைக்கவும் பயன்படுத்தப்பட்ட ஓலைகளும், அடுப்பு மூட்டுவதற்குக் கிடைத்த பன்னாடையும், கங்குமட்டையும் அளப்பரிய செல்வங்கள். சவர்க்காரம் கிடைக்காத போர்க்காலத்தில் கூடப் பனங்களியை உடுப்புத் தோய்க்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 1960களின் நடுப்பகுதியில் மாதகல் மிளகாய்க்கு அதன் தரத்தைவைத்து மாதகல் கறுப்பன் என்று கமத்தொழில் திணைக்களத்திடமிருந்து சிறப்புப் பெயர் கிடைத்தது. புகையிலைச்சங்கம், வெங்காயச்சங்கம் ஆகியவற்றிலும் மக்கள் வேலைசெய்து தமதுஅன்றாடத் தேவைகளைக் குறைவில்லாது நிறைவுசெய்து வந்தனர். நெசவுத்தொழிலும் சிலருக்குக் கைகொடுத்து வந்தது. ஆனால் நாட்டில் நடந்த அனர்த்தத்தால் 1992 ஆவணிமாதம் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வுக்குப் பின்னர் அவையெல்லாம் ஊமை கண்ட கனவாயின. ஆனால் இப்பவும் மாதகல் வளங்களை வைத்துச் சிறுகைத்தொழில்கள் ஏதாவது தொடங்கப்பட்டால் மக்கள் முனைப்புடன் செயற்படுவதற்கு ஏதுவாக இருக்கும். மேலும் கூறப்புகின, கடற்கரையோரம் மேடைபோட்டு நடைபெறும் கூத்துகளுக்கும் குறைவில்லை. அலையடிக்கும் சத்தத்துடன் காத்தவராயன், அல்லிஅர்ச்சுனன் ஆகிய கூத்துகளைத் தாளக்கட்டுப் பிசகாத அண்ணாவியாரின் குரல் வளத்துடன் கூத்துக் கலைஞர்களின் அபிநயங்களையும் அவர் தம் அரிதாரப் பூச்சுகளையும் விடியவிடிய கடலை, கச்சான் கொறித்த வண்ணம் இரசித்திருப்போம். மாட்டுவண்டிச் சவாரிக்கும் எமது கிராமம் பெயர் பெற்றதே. வீறுகொண்டு கடைவாயில் நுரைதள்ள மூசியோடும் மாடுகளைப் பார்த்தும், திருக்கல் வண்டிக்காரர்களின் ஆவேசக் கூச்சல்களைக் கேட்டும் திரண்டிருக்கும் ஊரே பரவசப்படும். பலநுாற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காங்கேயன் மாடுகள் மாதகல் துறையில் வந்திறங்கிய சான்றுகளை வரலாறுகள் கூறும். மாதகலில் இருந்து இந்தியா (இராமேசுவரம் 18 இலிருந்து 20 மைல்களே. எனவே இளைஞர் வட்டம் இரவு இந்தியா சென்று சினிமாப்படமும் பார்த்துவிட்டுத் திரும்புவார்கள். கடற்கரையை அண்மித்த போதி என்ற இடத்தில் நின்று பார்த்தால் சூரியன் காலையில் உதிப்பதையும், மாலையில் மறைவதையும் பார்க்கலாம். இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள கன்னியாகுமரி இதற்குப் பிரசித்தம் என்று வாய்கிழியப் பேசுகிறோம். ஆனால் அது எமதுாரிலேயே உள்ளது என்பது எம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? எமதூரில் ஐந்து பாடசாலைகளும், ஐந்து நூலகங்களும், கொடியேற்றம் காணும் சைவக் கோவில்கள் எட்டும், கிறித்தவத் தேவாலயங்கள் (கெபிஉட்பட) நான்கும் உள்ளன. மிக உயரமான சிவன் சிலையுடன் கூடிய சம்புநாதஈசுவரம் மாதகல் துறைக்கருகில் அமைந்துள்ளது. விபுலாநந்தர் நூலகத்தில் மின்னொளியில் கரப்பந்தாட்டம் மாதகல் இளைஞர்களுக்கும்,ஆமிக்காரருக்கும் இடையில் நடந்த காலங்களும் உண்டு. அதைவிட விளையாட்டுப் போட்டிகளும் நூலக விழாக்களும் நடைபெறுவது வழக்கம். எமது இளஞ்சிறார்களை முன்னேற்றும் விதமாக 1998ம் ஆண்டு அறநெறிப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டுத் தன்னலம் கருதாத ஆசிரியைகளால் நடாத்தப்பட்டு வருகிறது. கனடாவில் ஆரம்பிக்கப்பட்டு 30 ஆண்டுகளை நிறைவுசெய்யும் மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியமும், வெவ்வேறு நாடுகளில் இயங்கும் நலன்புரிச் சங்கங்களும் ஒன்றிணைந்து மாதகலை முன்னேற்றுவதில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. "உண்டிகொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்ற புறநானூற்றுப் பாடலை மெய்ப்பிக்கும் முகமாக ஒவ்வொரு மதியமும் இயலாத மூத்தோருக்குச் சமைத்த உணவும் வழங்குகிறார்கள். மேலும் மாரிகாலத்தில் வெள்ளம் கரைபுரண்டோடும். பாணாகவெட்டிக் குளத்தில் நீர்மட்டம் உயர்ந்துவரும் வேளையில் குளத்து மடை திறக்கப்பட்டு வெள்ளம் வாய்க்கால் வழியோடிக் கடலையடையும். மடைதிறப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்குச் சுழியோடியபடியே மடை திறக்கும் வல்லவர்களையே அழைப்பார்கள். அவர்கள் மடையர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் அப்பெயர் பின்னாளில் மூடர்களுக்கானது வருத்தத்துக்குரியது. 1960களில் முனியப்பர் கோவிலில் வேள்வி நடைபெற்று ஆடுகள் கோழிகளின் தலைகள் துண்டாடப்படும். ஆனால் எங்கள் தலைவர் பிரபாகரன் காலத்தில் அது முற்றாகத் தடைசெய்யப்பட்டது செயற்கரிய செயல்.
குளங்களிலே தாமரையும் குலைதள்ளிய தென்னைமரமும்
களனிகளில் நெற்பயிரும் கரையோரம் கற்பக தருவும்
கடலினிலே முரல் மீனும் கரைதனிலே கருவாடும்
கோவிலிலே காவடியும் நீச்சலுக்குக் கேணிகளும்
மாமரச் சோலைகளும் மரங்களிலே பூங்குயிலும்
வாழைத்தோட்டங்களும் வற்றாத கிணறுகளும்
அழகான தெருக்களும் அடுக்குமாடிக் கட்டிடங்களும்
எது இல்லை எமதுாரில்? நாம் வெளிநாட்டில் வாழுகிறோம்

சங்கமித்தை வந்திறங்கி மாதகலிலிருந்து அகன்றதால் மாதுஅகல் மருவி மாதகல் என்றானதாக மகாவம்சம் கூறும். மக்கள் இடம்பெயர்ந்த காலத்தில் வெள்ளரசுக் கிளையொன்று சம்பில்துறையில் நடப்பட்டுச் சுற்றிவர ஒரு புத்தவிகாரையும் கட்டப்பட்டுள்ளது. மாதகல் என்ற பெயர் சம்புகோளப் பட்டடின என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவுறுத்தப்பட்டாலும் எங்கள் உள்ளங்களில் மாதகல் கிராமம் என்றும் மாதகல் என்றபெயருடன் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.
கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் 30வது ஆண்டு (2024) மலரில் பிரசுரமானது ஆக்கம் :
சாந்தி அரவிந்தன்,
மொன்றியல்,
கனடா.



Nom

AnjaneyarTemple,2,ArasadeSithiVinayagar,21,Articles,4,AryankavuAyyappan,5,BharathiSanasamuka.N,2,Canada,2,Canada.M.n.m.o,24,Denmark,9,F.M.P.ThomaiyarOnriyam,11,F.of.G.P.School,3,fr.stjosephsports,1,France,49,Gandhiji.P.School,9,GanthigySanasamuka.N,20,Germany,54,Hindu Samaiya A.s,1,HinduSamaiyaA.s,1,History,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,5,Italy,1,jana,7,KalaimagalSanasamuka.N,1,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,32,KanchipuramVairavar,4,LiveTv,148,London,9,LurthuMaathaKevi,13,Makkalval,76,mathagal,109,Mathagal NalanPuri.S,14,MathagalNalanPuri.S,6,Net,3,Nunasai.V,47,NunasaiMurugan,24,Obituaries,237,PaanavaddyAmman,26,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,6,Sahayapuram,58,SampunathaEswaram,3,SithiVinayagar.P.S,27,SivanKovil,33,St.AntonysChurch,7,St.Joseph,54,St.SebastiansChurch,9,St.Soosaiyappar.C,3,St.Thomas Church,19,St.Thomas.P.School,19,St.Thomas.R.C.G,44,St.thomasunaited,9,stjoseph sports,1,Swiss,9,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,45,VinayagarSportsClub,30,VipulanantharPadippakam,4,wishes,63,
ltr
item
mathagal.net: "எங்கள் கிராமம் மாதகல்'' ஆக்கம் : சாந்தி அரவிந்தன், மொன்றியல், கனடா...!
"எங்கள் கிராமம் மாதகல்'' ஆக்கம் : சாந்தி அரவிந்தன், மொன்றியல், கனடா...!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKxvuBGt6ngTvLWTuV_F3yS4GhuASi_Yd5mbEOs-m96Mt4zg99JMcFeBWFBoKqOmsiQMSUPugDGKg-q8tRAhR_mVJGqYDhyTVQC6ddr_3HEzZh2YDj3hpZZT3t6SpI-iKdlmkjpbXbarPtFX3xYOeZFNPHCh633Fgcb1PupaZ_3mP9kPHii-DzFRKS6Oom/s16000/NET.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhKxvuBGt6ngTvLWTuV_F3yS4GhuASi_Yd5mbEOs-m96Mt4zg99JMcFeBWFBoKqOmsiQMSUPugDGKg-q8tRAhR_mVJGqYDhyTVQC6ddr_3HEzZh2YDj3hpZZT3t6SpI-iKdlmkjpbXbarPtFX3xYOeZFNPHCh633Fgcb1PupaZ_3mP9kPHii-DzFRKS6Oom/s72-c/NET.jpg
mathagal.net
https://www.mathagal.net/2026/02/Shanti.A.Canada.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2026/02/Shanti.A.Canada.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy