இலங்கை யாழ்பணம் மாதகலைச் சேர்ந்த கவிஞர் ஆன் மேரி தனேசிகா எமறன் அவர்களுக்கு "தமிழினியாள்" விருது வழங்கி கெளரவிப்பு முக்கூடல் தமி...
இலங்கை யாழ்பணம் மாதகலைச் சேர்ந்த கவிஞர் ஆன் மேரி தனேசிகா எமறன் அவர்களுக்கு "தமிழினியாள்" விருது வழங்கி கெளரவிப்பு
முக்கூடல் தமிழ்ச்சங்கம் சென்னை தமிழ்நாடு கலை இலக்கிய படைப்பாளிகள் கூட்டியக்கம், சென்னை இணைந்து நடத்தும் முப்பெரும் விழா சென்னையில் அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் 09.01.2026 (வெள்ளிக்கிழமை)அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பெருமக்கள் , பேராளுமைகள் , படைப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து பல்வேறு விருதுகளையும் வழங்கினர். இதன் போது இலங்கை யாழ்பணம் மாதகலைச் சேர்ந்த கவிஞர் ஆன் மேரி தனேசிகா எமறன் அவர்களுக்கு "தமிழினியாள்" விருது வழங்கி கெளரவிக்கப் பட்டுள்ளது குறிப்பிட தக்கது.
எம் மண்ணின் பெருமையை உலகறியச் செய்யும் தனேசிகா எமறன் அவர்களுக்கு மாதகல் இணையத்தளம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறிக்கொள்கின்றது.
.jpeg)
.jpeg)
