சகாயபுரம் மாதகல்J/150கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ள வாய்க்கால் 90 வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாமல் இருப்பதை பலரிடமும் பலதடவைகள்...
சகாயபுரம் மாதகல்J/150கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட வெள்ள வாய்க்கால் 90 வருடங்களுக்கும் மேலாக திருத்தப்படாமல் இருப்பதை பலரிடமும் பலதடவைகள் எடுத்துக்கூறி இருக்கின்றோம். தற்போது வெள்ள அனர்த்தம் காரணமாக இவ் வீதியால் பயணிக்க முடியாமல் இருப்பதையும் வெள்ளநீர் தேங்கி நிற்கின்றதால் இவ்வீதியால் பயணம் செய்வோர் கிருமித்தொற்றுக்கு உள்ளாகின்றார்கள் என்பதனையும் எடுத்துக் கூறியதற்கு இனங்க உடனடியாகவே இவ்வீதியினை பார்வையிட்டதுடன் இவ்வீதியினை சீர்செய்து தருவதாக கூறிச் சென்ற சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் அவர்களுக்கு சகாயபுரம் மக்கள் சார்பாக நன்றிகளை கூறி நிற்கின்றோம். அத்துடன் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் மானிப்பாய் பிரதேசசபை தவிசாளர் அவர்களுடன் மாதகல் வட்டார உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றிகள் .இவ் வீதியினை உடனடியாகவே மக்கள் பாவனைக்கு உகந்த முறையில் தேங்கி நிற்கின்ற நீரினையும் அகற்றிதருமாறும் கோட்டுக்கொள்கின்றோம் .
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
