வரலாற்று பெருமைமிகு கடல் கொண்ட மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் சிவனுடைய திருவுருவம் நிறுவப்பட்டு இன்று பன்னிரண்டு வருடங்கள் நிறைவு. அகில இலங்கை...
வரலாற்று பெருமைமிகு கடல் கொண்ட மாதகல் சம்புநாத ஈச்சரத்தில் சிவனுடைய திருவுருவம் நிறுவப்பட்டு இன்று பன்னிரண்டு வருடங்கள் நிறைவு. அகில இலங்கை சைவமகா சபையால் நிறுவப்பட்டது. 01.12.2013 - 01.12.2025

ஜம்புகோளப்பட்டின விகாரையிலிருந்து 200 மீற்றர் தொலைவில் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயம் காணப்பட்டது.
இங்குதான், 21 அடி உயரமான தியான நிலையில் உள்ள சிவபெருமானின் சிலை காணப்படுகின்றது.மிகவும் கம்பீரமான தோற்றத்துடன் அரவத்தின் மேலே சிவபெருமான் வீற்றிருப்பதுபோல் இச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சம்புநாத ஈச்சரத்தில் சைவ மகா சபையினால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் அமைக்கப்பெற்ற சிவபெருமானின் தியான திருவுருவம் தற்போது மீளவும் வர்ணம் தீட்டப்பெற்று 2023.12.01 திருக்குடமுழுக்கு செய்யப்பெற்றது.
அவரின் பின்னர் அவரது துணைவியார் இவ் ஆலயத்தை கவனித்து வருகின்றார். நரசிங்கசித்தரின் சமாதியும் ஆலயவளாகத்தின் உள்ளே காணப்படுகின்றது. அவர் உயிர்பிரியும் தருவாயில் அவர் முன்வைத்த வேண்டுகோளுக்கு இணங்க இச் சமாதி அமைக்கப்பட்டுள்ளது.
மகா சிவராத்திரியை முன்னிட்டு மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் கோவில், கீரிமலை சமுத்திரக்கரை காசி லிங்கேஸ்வரர், பொன்னாலை இராவணேஸ்வரம், கிளிநொச்சி மன்னித்தலை சிவலிங்கப் பெருமான், மாங்குளம் ஆதிசிவன் ஆலயம் ஆகிய இடங்களில் அடியவர்கள் தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்து வழிபட முடியுமென அகில இலங்கை சைவமகா சபையின் பொதுச்செயலாளர் வைத்தியகலாநிதி ப.நந்தகுமார் தெரிவித்தார்.
மகா சிவராத்திரி நன்நாளான இன்று வெள்ளிக்கிழமை(08.03.2024) இரவு முதல் நாளை சனிக்கிழமை (09.03.2024) காலை-06 மணி வரை இவ்வாறு அடியவர்கள் தங்கள் கரங்களால் பால், தயிர், இளநீர், நீர் முதலான அபிஷேக திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபட முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டான நான்கு சாமப் பூசைகளும் சிறப்பாக இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

