நான்கு ஆண்டுகள் கடந்தாலும் நாம் பகிர்ந்த நினைவுகள் மட்டும் நாள்தோறும் அருகில் வந்து இதயம் தழுவி பேசுகின்றன. சிரித்த முகம், மெத்தனமாக “அண்ணா…...
நான்கு ஆண்டுகள் கடந்தாலும்
நாம் பகிர்ந்த நினைவுகள் மட்டும்
நாள்தோறும் அருகில் வந்து
இதயம் தழுவி பேசுகின்றன.
சிரித்த முகம், மெத்தனமாக
“அண்ணா…” என்று அழைத்த குரல் –
இன்று காற்றில் கலந்தாலும்,
காதில் இன்னும் ஓசை தருகிறது.
எங்கு சென்றாலும் நம் உள்ளத்தில்
நிழலாய் நீயே வாழ்கிறாய்.
நினைத்தாலே வலி வருமே,
நினைவு வந்தால் கண்ணீர் தருமே;
ஆனால் நீ வாழ்ந்த அன்பு மட்டும்
என்றும் எங்களை தாங்கி நிற்குமே.
தம்பி… எப்போதும் எங்களுடன் நீயே,
நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கிறாய்.
Jacksan Jackie
யாழ்.மாதகல் துறைமுகத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சுவாம்பிள்ளை அன்ரனி வினோஜன் அவர்கள் 17.11.2021 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
சுவாம்பிள்ளை (ராசன்), சகாயராணி (புஸ்பம்) தம்பதிகளின் அன்புப் புதல்வனும் பெர்ணாண்டோ, ஜக்சன், சியானா,டொறின்சன், லக்சி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 20.11.2021 மாலை 02.30 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பூதவுடல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.தகவல்குடும்பத்தினர்
சுவாம்பிள்ளை (ராசன்), சகாயராணி (புஸ்பம்) தம்பதிகளின் அன்புப் புதல்வனும்
பெர்ணாண்டோ, ஜக்சன், சியானா,டொறின்சன், லக்சி ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20.11.2021 மாலை 02.30 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பூதவுடல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.


