பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாதகலைச் சேர்ந்த மாணவிக்கு, அவரது குடும்ப வருமான நிலை அறிந்து, அவரது மேற்படிப்பின...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாதகலைச் சேர்ந்த மாணவிக்கு, அவரது குடும்ப வருமான நிலை அறிந்து, அவரது மேற்படிப்பினை தொடர மடிக்கணணி ஒன்றினை வாங்க, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினூடாக
29-05-2025 அன்று அனுப்பிய கடிதம் எமது செயற்குழுவில் ஆராயப்பட்டு, மாதகல் கிராமத்தின் எதிர்கால இளைய சமுதாயத்தின் கல்வி முன்னேற்றம் கருதி, அதற்குரிய செலவான ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் [1,50,000] ரூபா வங்கி மூலம் 30-07-2025 அன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இப்பணத்தினை கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் செயலாளர் திரு நா. சரவணன் அவர்கள் மாணவியிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் மாணவியின் தாயார், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவராக இருந்த "மாதகல் விடிவெள்ளி" திரு வி. சிற்றம்பலம் அவர்களும், கணக்காளராக இருந்த திரு ச. ஞானபண்டிதர் அவர்களும் கலந்து கொண்டனர்.
செல்வி சு. டிலக்சனா அவர்கள் உயர்தரப் பரீட்சையில் அதி சிறந்த பெறுபேறுகளை எடுத்து மருத்துவ பிரிவில் அனுமதி பெற்று மாதகல் கிராமத்திற்கு பெருமை சேர்த்ததை அறிந்து எமது சங்கம் மகிழ்ச்சி அடையும் அதேவேளை பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
