பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கமும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமும் இணைந்து நடாத்தும் "பசுமையில் மாதகல்" நிகழ்வு 8ஆவது வருடத்தில் : 16-11-2025

 பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் "பசுமையில் மாதகல்" நிகழ்வினை 8ஆவது வருடாந்த நிகழ்வாக, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக, இலவசம...

 பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் "பசுமையில் மாதகல்" நிகழ்வினை 8ஆவது வருடாந்த நிகழ்வாக, இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமூடாக, இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுகள் ஞாயிறு 16-11-2025 அன்று மழை, வெள்ளம் காரணமாக  மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையில் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின்  தலைவர் திரு சா. அருள்ஞானானந்தன்  அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.


                         இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு கு. பிரபாகரமூர்த்தி  அவர்களும் [பிரதேச செயலாளர், சண்டிலிப்பாய்], சிறப்பு விருந்தினராக ந.மயூரன் அவர்களும் [கமநல உத்தியோகத்தர் - கமநல சேவை நிலையம் நவாலி], கௌரவ விருந்தினர்களாக மாதகல் J/151 , J /152 பிரிவுகளின் கிராம சேவையாளர் திரு க. சுதர்சன் அவர்களும், மாதகல் J/150 பிரிவின் கிராம சேவையாளர் திரு ப. சுஜீவன் அவர்களும், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க நிர்வாக உறுப்பினர்கள்,  மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், மாதகல் பாடசாலை அதிபர்கள், மாதகல் பங்குத்தந்தை அருட்பணி அ. அன்ரனி அமலறாஜன் அவர்களும், மாதகல் ஆரியங்காவு ஐயப்பன் ஆலயத்தின் திரு சிவஸ்ரீ கஜநேசக்குருக்கள் அவர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


                        மாதகல் கிராமத்தினைச் சேர்ந்த மக்களிற்கு இலவசமாக மரக்கன்றுகள் [நெல்லி, கமுகு,மாதுளை, ஜம்பு, கொய்யா, எலுமிச்சை, தோடை, மாமரம், பலாமரம்] என்பவை வழங்கப்பட்டது. 


                      அத்துடன் விநாயகர் விளையாட்டுக்கழக மைதானத்திலும், விக்னேஸ்வரா பாடசாலையிலும் ஒரு தொகுதி மரக்கன்றுகள் நாட்டப்பட்டது.


                     இந்த நிகழ்விற்கு மண்டபம் தந்துதவிய மாதகல் விக்னேஸ்வரா பாடசாலைக்கு எமது சங்கம் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கும் அதேவேளை,  இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற முன்னின்று உழைத்த மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களிற்கும், இந்த நிகழ்வினை நேரடி ஒளிபரப்பு செய்த மாதகல் மீடியா ஊடகத்திற்கும்  எமது சங்கம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.


                     இந்த சிறிய திட்டத்தின் மூலம் பூமிப்பந்தின் சூழல் மாசடைவதைத் தடுத்து, சமநிலையினைப் பேண, எமது கிராமமும்  பங்களிப்பதென்பதில் எமது சங்கத்தின் கடமை என்பதை உணர்ந்து, பெருமை அடைகின்றது.















































































Nom

AnjaneyarTemple,2,ArasadeSithiVinayagar,18,Articles,2,AryankavuAyyappan,4,BharathiSanasamuka.N,2,Canada,1,Canada.M.n.m.o,23,Denmark,7,F.M.P.ThomaiyarOnriyam,9,F.of.G.P.School,2,fr.stjosephsports,1,France,40,Gandhiji.P.School,7,GanthigySanasamuka.N,16,Germany,42,HinduSamaiyaA.s,1,History,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,4,Italy,1,jana,9,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,27,KanchipuramVairavar,4,LiveTv,130,London,6,LurthuMaathaKevi,8,Makkalval,76,mathagal,94,Mathagal NalanPuri.S,13,MathagalNalanPuri.S,4,Net,3,Nunasai.V,42,NunasaiMurugan,21,Obituaries,203,PaanavaddyAmman,20,RajaRajeshwary,7,S.k.kGnanavairavar,4,Sahayapuram,52,SampunathaEswaram,2,SithiVinayagar.P.S,23,SivanKovil,27,St.AntonysChurch,7,St.Joseph,49,St.SebastiansChurch,5,St.Soosaiyappar.C,3,St.Thomas Church,18,St.Thomas.P.School,15,St.Thomas.R.C.G,35,St.thomasunaited,7,stjoseph sports,1,Swiss,6,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,9,Veerapathirar,1,Vigneswara,35,VinayagarSportsClub,22,VipulanantharPadippakam,3,wishes,54,
ltr
item
mathagal.net: பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கமும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமும் இணைந்து நடாத்தும் "பசுமையில் மாதகல்" நிகழ்வு 8ஆவது வருடத்தில் : 16-11-2025
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கமும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமும் இணைந்து நடாத்தும் "பசுமையில் மாதகல்" நிகழ்வு 8ஆவது வருடத்தில் : 16-11-2025
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxjTLgq7WrUjM5B9UnUtW_yFbk3WGzCeJkwmWsTkfH2S5cI0dLrVm3hRx3udk59IIY0UsqViiNZx9BVqzz4rmh3qIFSqCrxCfPsBhQ3gPVTDHnpL9v57ufvrQdV3ouYx5GKDF2gxH90febDtvIw-9mPcc5r3zoX5LddNckyOZvAtE4IVVdh-UyBypDHKY/s320/f%20(1).jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxjTLgq7WrUjM5B9UnUtW_yFbk3WGzCeJkwmWsTkfH2S5cI0dLrVm3hRx3udk59IIY0UsqViiNZx9BVqzz4rmh3qIFSqCrxCfPsBhQ3gPVTDHnpL9v57ufvrQdV3ouYx5GKDF2gxH90febDtvIw-9mPcc5r3zoX5LddNckyOZvAtE4IVVdh-UyBypDHKY/s72-c/f%20(1).jpg
mathagal.net
https://www.mathagal.net/2025/11/fmk.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2025/11/fmk.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy