வெற்றிலைக்கேணி முள்ளியானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா அன்ரனியோசேப் அவர்கள் 23.10.2025 வியாழக்கிழமை அன்று காலமானார். அ...
வெற்றிலைக்கேணி முள்ளியானை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட துரைராஜா அன்ரனியோசேப் அவர்கள் 23.10.2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் மாதகல் துறைமுகத்தைச் சேர்ந்த பாக்கியராசா துரைராஜாவின் மகன் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
யாழில் கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு..!
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்...
இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகு மூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் சென்ற ஜோசேப் துரைராசா அன்ரனி ஜோசேப் என்னும் 44 வயதுடைய குடும்பஸ்த்தருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுள்ளது.
குறித்த குடும்பஸ்தர் தனக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதாக தனது மனைவிக்கு தொலைபேசிமூலம் தெரிவித்து உதவிக்கு சிலரை அழைத்துள்ளார்.
உடனடியாக இன்னொரு படகுமூலம் தரையில் இருந்து கடலுக்கு உதவிக்கு சென்றவர்கள் குறித்த மீனவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்ததுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
குறித்த நபரை பரிசோதித்த வைத்தியர் ஏற்கனவே அவர் #உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.

