சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் கீழ்உள்ள கிராம அலுவலர்களின் பிரிவுகளை உள்ளடக்கி இயங்கி வருகின்ற முதியோர் சங்கங்களில் வினைத்திறனாக இயங்குகின...
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தின் கீழ்உள்ள கிராம அலுவலர்களின் பிரிவுகளை உள்ளடக்கி இயங்கி வருகின்ற முதியோர் சங்கங்களில் வினைத்திறனாக இயங்குகின்ற கிராமிய முதியோர் சங்கத்தெரிவில் 2ம்
இடத்தினை பெற்றுக்கொண்டமைக்காக பாராட்டுப் பத்திரமும் கேடையமும் சகாய புரம் மாதகல் J/150 கிராம மட்ட முதியேர் சங்கத்திற்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இச்சங்கத்தினை நல்ல முறையில் அறிவுரை கூறி வழிநடத்துகின்ற புனித சதா சகாய அன்னை ஆலயத்தினுடைய அன்புக்கும் மதிப்புக்குமுரிய பங்குத்தந்தை ஞானறூபன் அடிகளாருக்கு,மனம் நிறைந்த நன்றிகள். அத்தோடு 72 முதியோரையும் நல்ல முறையில் அவர்களுடைய தேவைகள் அறிந்து மதிய உணவுகள் மற்றும் , ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் நல்ல உள்ளம் கொண்ட கொடையாளிகளிடம் இருந்து காலை உணவும் , உடைகளையும்பெற்றுக் கொடுத்துவரும் முதியோர் சங்கத்
தலைவர் A. யேசுராசா, செயலர் A. A. ஜெயறட்ணம், பொருளாளர். M. மதனாகரன் ஆகியோருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை புனித சதா சகாய அன்னை ஆலயத்தின் இளைஞர் கழகம் சார்பாக தொரிவித்துக்கொள்கிறோம்.
.jpeg)
.jpeg)
