அரச நடன விழா 2025 இற்கான போட்டியில் யா/ மாதகல் நுணசை வித்தியாலய மாணவன் மாவட்ட மட்டத்தில் இடங்களைப் பெற்றுள்ளார். குறித்த பாடசாலையின் தரம் 0...
அரச நடன விழா 2025 இற்கான போட்டியில் யா/ மாதகல் நுணசை வித்தியாலய மாணவன் மாவட்ட மட்டத்தில் இடங்களைப் பெற்றுள்ளார்.குறித்த பாடசாலையின் தரம் 09 இல் கல்வி பயிலும் மாணவன் செல்வன் ஜெகதீஸ்வரன் சாணுஜன் சாஸ்திரிய நடனம் ஆண்களுக்கான தனி வயதெல்லை 13 தொடக்கம் 18 வரையான பிரிவில் யாழ் மாவட்டத்தில் 2ஆம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும், எமது கிராமத்திற்கும் பெருமைகளை சேர்த்துள்ளார்.இம் மாணவரையும் வழிப்படுத்திய நடன ஆசிரியரையும் பாடசாலைச் சமூகம் பாராட்டி வாழ்த்துவதாேடு, மாதகல் இணையத்தளமும் பாராட்டி பெருமை கொள்கிறது.
.jpg)
அகில இலங்கைப் பாடசாலை சிறுவர் தினச் சித்திரப் போட்டியில் யா/ மாதகல் நுணசை வித்தியாலய மாணவர்கள் இடங்களைப் பெற்றுள்ளனர்.குறித்த பாடசாலை மாணவர்களான செல்வன் சுதர்சன் கிக்ஷான் கருத்து வெளிப்பாடு சித்திரத்தில் 2ஆவது இடத்தையும், செல்வன் ரகு துவாரகன் அலங்கார வடிவமைப்பு சித்திரத்தில் 3ஆவது இடத்தையும், செல்வன் சதீஸ்வரன் துக்ஷாந் கருத்து வெளிப்பாடு சித்திரத்தில் 3ஆவது இடத்தையும், செல்வி சுவாம்பிள்ளை வித்வினா கருத்து வெளிப்பாடு சித்திரத்தில் 2ஆவது இடத்தையும் பெற்று பாடசாலைக்கும், எமது கிராமத்திற்கும் பெருமைகளை சேர்த்துள்ளனர்.இம் மாணவர்களையும் வழிப்படுத்திய சித்திர ஆசிரியரையும் பாடசாலைச் சமூகம் பாராட்டி வாழ்த்துவதாேடு, மாதகல் இணையத்தளமும் பாராட்டி பெருமை கொள்கிறது.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
