யா/மாதகல் சென் ஜோசப் மகா வித்தியாலய முதல்வர் திரு. சுப்பிரமணியம். புஸ்பரங்கன் 01.09.2025அன்று இலங்கை கல்வி நிர்வாகசேவை (SLEAS) விஞ்ஞானபாடத...
1995ம் ஆண்டு இடப்பெயர்வின் காரணமாக வன்னிப்பெருநிலப் பகுதிக்கு இவர்களது குடும்பமும் சென்றவேளை ஒட்டுசுட்டான் பகுதியில் குடியேறி ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத்தொடர்ந்த இவர் அப்போது அதிபராக இருந்த திரு. த. பங்கயச்செல்வன் அவர்களால் விஞஞானப்பிரிவு புதிதாக ஆரம்பிக்கப்பட்டபோது முதலாவது அணியில் உயர்தர உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்றார். உயர்தரத்தை தொடர்ந்து அப்போதய வன்னிப்பகுதியின் ஆசிரியத்தேவையை பூர்த்திசெய்த பலருள் ஒருவராய் இவரும் உருவாக்கியவர். அதிபர் தேவராஜா அவர்களின் வழிகாட்டலில் ஒலுமடு தமிழ்வித்தியாலயத்தில் பணியை ஆரம்பித்த போது கல்வி, விளையாட்டு, உடற்பயிற்சி என்று தாம்பணியாற்றிய காலத்தில் சேவையில் ஆசிரிய பயிற்சியைத் தொடர்ந்து பின்னாளில் சிறந்த விஞ்ஞான ஆசிரியராக பணியாற்றி பல ஆளுமையுள்ள மாணவர்களை உருவாக்கியவர். வன்னி பெருநிலப்பரப்பில் இறுதியாக முத்தையன்கட்டு வலதுகரை மகாவித்தியாலயத்தில் வன்னிக்கான தனது சேவையை நிறைவுசெய்து யாழ்மாவட்டம் வந்து வலிகாமம் கல்வி வலயத்தில் பணியினை தொடர்ந்து ஆசிரியராக, அதிபராக பணிகளாற்றி தன் பணி நிறைத்து, உயர் சேவையான கல்வி நிர்வாக சேவையில் 01.09.2025ல் இணைகிறார்.
இறுதியாக நடைபெற்ற இலங்கை கல்வி நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் SLEAS -2025 (எழுத்துப் பரீட்சை + நேர்முகப் பரீட்சை) சித்தியடைந்து 01.09.2025 இல் நியமனம் பெறக்காத்திருக்கும் எமது பாடசாலையில் அரும்பணியாற்றும் அதிபர் சுப்பிரமணியம் புஸ்பரங்கன் அவர்கள் அப்பதவியில் சிறந்து விளங்கவும் மேலும் பல உயர் பதவிகளை பெற்றிட பாடசாலைச் சமூகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
யா/மாதகல் சென் ஜோசப் மகா.வித்தியாலயம்

