6ஆவது வருடமாக நடந்த "வீரா மென்பந்துச் சுற்றுத் தொடரின் மாதகல் பெரும் சமரின்" இறுதி நாள் போட்டிகள் : 18-05-2025 விநாயகர் விளை...
6ஆவது வருடமாக நடந்த "வீரா மென்பந்துச் சுற்றுத் தொடரின் மாதகல் பெரும் சமரின்" இறுதி நாள் போட்டிகள் : 18-05-2025
விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்திய[மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் முன்னைய அதிபர் ] அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த மாபெரும்
"வீரா மென்பந்து சுற்றுத்தொடரின் » இறுதிப் போட்டி நிகழ்வுகள் ஞாயிறு 18-05-2025 அன்று மாலை நேரப் பொழுதில் நடந்தது.
இன்றய தினம் ஏற்கனவே விளையாடிய 28 கழகங்களில், இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகிய மல்லாகம் ஸ்டார் கழகமும், அச்சுவேலி கோல்ட் ஸ்டார் கழகமும் சமர் செய்து மல்லாகம் ஸ்டார் அணி வெற்றி பெற்று வீரா மென்பந்துச் சுற்றுத்தொடரின் வெற்றிக் கேடயத்தினை தனதாக்கிக் கொண்டதுடன் 40,000ரூபா பணப்பரிசிலையும் பெற்றுக்கொண்டது.
அச்சுவேலி கோல்ட் ஸ்டார் இரண்டாம் இடத்தினை தனதாக்கி 30,000ரூபா பணப்பரிசிலை பெற்றுக் கொண்டது.
மற்றும் விளையாட்டில் பங்குபற்றிய அனைவரிற்கும் வீரா மென் பந்துச் சுற்றுத்தொடரின் ஞாபகார்த்தமாக பதக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக திரு கலாநிதி க. இளங்கோஞானியார் [ வைத்தியர், யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பார்] அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக திரு சி. சிவபாலசுப்பிரமணியம் [சட்டத்தரணி]அவர்களும், திரு வி. சிற்றம்பலம் [இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர்]அவர்களும், திரு பூ, அன்பழகன் [சமூக ஆர்வலர்]அவர்களும், கௌரவ விருந்தனராக திரு வீ. குகரவீந்திரநாதன் -றவி [பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் அவர்களும் கலந்து கொணடனர்.
இந்த நிழ்வினை மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் 6 ஆவது வருடமாகவும் திறம்பட நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.