மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் இளைப்பாறிய அதிபர் அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்தமாக, மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழ...
மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் இளைப்பாறிய அதிபர் அமரர் திரு கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்தமாக,
மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழகம் 2025ஆம் ஆண்டில் 6ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தும் "வீரா மென்பந்துச் சுற்றுத் தொடரின் வெற்றிக் கேடயத்திற்கான மாதகல் பெரும் சமரின்" இறுதி நாள் நிகழ்வுகள் ஞாயிறு 18-05-2025 அன்று நடைபெறும்.
இச்சமரில் ஏற்கனவே விளையாடிய 28 விளையாட்டுக் கழகங்களில்
அணி 1 இல்
Mathagal Kaanthiji S.C. விளையாட்டுக் கழகமும்
அணி 2இல்
Mallaakam Star விளையாட்டுக் கழகமும்
அணி 3இல்
Achchuveli Gold Star விளையாட்டுக் கழகமும்
அணி 4இல்
Inuvil Kalai Oli விளையாட்டுக் கழகமும் வெற்றியீட்டி இறுதிச் சுற்றிற்கு தகுதி பெற்று, வீரா மென்பந்துச் சுற்றுத்தொடரின் வெற்றிக் கேடயத்திற்காக 18-05-2025 அன்று போட்டி போடவுள்ளனர்.
வெற்றி பெறும் கழகத்திற்கு
1ஆவது பரிசாக வீரா வெற்றிக் கேடயமும், 40,000ரூபாவும்
2ஆவது பரிசாக வெற்றிக் கிண்ணமும், 20,000ரூபாவும் வழங்கப்படும்.