சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தால் வருடாந்த செயற்திட்டமாக செயற்படுத்தப்படும் வாழ்வாதார ...
சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதியுதவியில் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தால் வருடாந்த செயற்திட்டமாக செயற்படுத்தப்படும் வாழ்வாதார உதவித்திட்டத்தின் 08வது தடவையான வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் கடந்த 14.05.2025 தேதி மாலை 05:30 மணிக்கு மாதகல் சித்தி விநாயகர் முன்பள்ளியில் மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க தலைவர் அருட்பணி செ.றோய்பேடினன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் விருந்தினராக சுவிஸ் மாதகல் நலம்புரிச் சங்கத்தின் உறுப்பினர்களான திரு வீரவாகு பாலசுப்பிரமணியம், திரு வேலுப்பிள்ளை தயாபரன் கலந்து கொண்டதுடன் பிரான்ஸ் மாதகல் நலம்புரிச் சங்க செயலாளர் திரு வீரபாகு குகரவீந்திரன், மாதகல் நலம்புரிச் சங்க தலைவர், மாதகல் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றிய உறுப்பினர் தணிகாசலம், மாதகல் கிராம அலுவலர்கள், மாதகல் சமூக அபிவிருத்திச் சங்க நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக யாழ் மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் மாணவர்களது வரவேற்பு நடனம் நடைபெற்றது. வாழ்வாதார உதவித் திட்டத்தின் பதிவாக சுவிஸ் மாதகல் நலம்புரிச் சங்கத்திற்கு மாதகல் சமூக அபிவிருத்திச் சங்கத்தினால் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. மேலும் வாழ்வாதார உதவித் திட்டத்தில் மாதகல் கிராமத்தை சேர்ந்த தகமையுள்ள 12 பயனாளிகளுக்கு ஆடு வளர்ப்புக்கான 12 ஆடுகளும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.