புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா 25.05.2025 அன்று அன்புக்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய அருட்பணி றெக்ஸன் தலைமையில் திருநாட்...
புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா 25.05.2025 அன்று அன்புக்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய அருட்பணி றெக்ஸன் தலைமையில் திருநாட்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.எம்மையெல்லாம் இறை விசுவாசத்தில் வாழ கடந்த பத்து நாட்களும் எமக்கு தனது ஆழம் நிறைந்த மறையுரை யால் திடப்படுத்திய அமலமரித் தியாகிகள் சபையைச் சார்ந்த அருட்பணி
சந்திர தாஸ் அடிகளார் அவர்கட்கும். எம்மோடு என்நாளும் கரம் கோர்த்து அன்னை யின் திருநாள் சிறப்பாக நடபெற எல்லா வழிகளிலும் இரவு பகல் பாராது எம்மை வழிநடத்திய மதிப்பார்ந்த பங்குத்தந்தை அருட்பணி ஞானறூபன் அடிகளாருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை புனித சதா சகாய அன்னை ஆலய மக்கள் சார்பாக மனம் நிறைந்த நன்றிகளைத் கூறிநிற்கின்றோம். அத்தோடு எல்லா நாட்களிலும் பாடல்களை நெறிப்படுத்தி தனது திறமையால் இசை அமைத்த செல்வன் தர்சன் அவர்களுக்கும் பாடல்களை இனிமையான குரல்வழத்தால் திருநாள்திருப்பலியை மெருகூட்டிய பாடகர் குழாமினருக்கும், திருவிழாக் காலங்களில் எமது ஆலயத்தை மின்வி ளக்குகளால் ஒளியூட்டிய செல்வன் றொகான்,தர்சன் அவர்களுக்கும், ஆலயத்தை அழகுபடுத்திய அருட்பணிச்சபையினருக்கும், இளைஞர்கழகத்தினருக்கும்,பீடப் பணியாளர்களுக்கும்,திருப்பாலத்துவ சபையினருக்கும், மாசில்லா மாதா அன்னையர்களுக்கும் ,ஆலயத்தின் எல்லா அன்பியத்தினருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்து நிற்கின்றோம். அத்தோடு ஒலியமைப்பினை வழங்கிய நகுலேஸ் குழுவினருக்கும் ஒளியமைப்பினை வழங்கிய பிரபா குழுவினருக்கும் மனம் நிறைந்த நன்றிகளை ஆலயம் சார்பாக கூறிநிற்கின்றோம்.
புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஆயத்த நாட்களான இன்று (24.05.2025) நற்கருணை பெருவிழா மிகவும் விமர்சையாகவும் பக்திநிறைந்ததாகவும் காட்சி தந்தது.
இன்றைய நாளில் எமது ஆலயத்தில் அருட்சகோதரனாக இருந்த காலத்தில் எமது ஆலய மக்களின் ஆன்மீக பயணத்திலும் ஆலய நிகழ்வுகளையும் திறம்படநடாத்தியவருமான அருட்பணி றொகான் அடிகளாரை இன்றைய நாளில்ஆலய சமூகமாக அழைத்து எமது ஆலயத்தில் முதல் திருப்பலியினையும் நிறைவேற்றினார்.அதன் பின் அருட்தந்தை அவருக்கு பொன்னாடையினையும் மலர் மாலையினையும் எமது அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய பங்குத்தந்தை அருட்பணி ஞானறூபன் அடிகளார் அணிவித்து கௌரவித்தார். அதன்பின்னர் புதிய குருவானவருக்கு அன்புப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.அதன்பின்னர் ஆயத்த நாள் வழிபாடுகளில் எம்மை விசுவாசத்தில் ஆழப்படுத்திய அன்புக்கும் பெரும் மதிப்புக்கும் உரிய அருட்பணி சந்திர தாஸ் அவர்களால் பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா வின், முன்ஆயத்த எட்டாம் நாளான இன்று. (23.05.2025)இறை உறவில் மகிழும் குடும்பமாவோம்,என்ற மையக் கருத்தில் இறைமக்களாகிய எம்மை தனது இறையியல் அனுபவத்தின் ஊடாக இறைவன் அருகில் அழைத்து சென்ற, அன்புக்கும் பெரும்மதிப்புக்குமுரிய அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை சந்திர தாஸ் அடிகளாருக்கும். எமது பங்குத்தந்தை அருட்பணி ஞானறூபன் அடிகளாருக்கும்.மற்றும் நவநாளை சிறப்பித்த பெற்றோர்களுக்கும் நன்றிகளை, புனித சதாசகாய அன்னை ஆலயம் சார்பாக கூறிநிற்கின்றோம்.
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழா வின், முன்ஆயத்த நான்காம் நாளான இன்று. (19.05.2025)நிலைவாழ்வுதரும் இறை வார்த்தை,என்ற மையக் கருத்தில் இறைமக்களாகிய எம்மை தனது இறையியல் அனுபவத்தின் ஊடாக இறைவன் அருகில் அழைத்து சென்ற, அன்புக்கும் பெரும்மதிப்புக்குமுரிய அமல மரித்தியாகிகள் சபையை சேர்ந்த அருட்தந்தை சந்திர தாஸ் அடிகளாருக்கும். எமது பங்குத்தந்தை அருட்பணி ஞானறூபன் அடிகளாருக்கும்.மற்றும் நவநாளை சிறப்பித்த முதலாம் வலய அம்பியக் குடும்பத்தினருக்கும் நன்றிகளை, புனித சதாசகாய அன்னை ஆலயம் சார்பாக கூறிநிற்கின்றோம்.
மாதகல் புனித சதாசகாய அன்னையின் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் தொடக்க நாளான இன்று 16.05.2025 அன்புக்கும் பெரும் மதிப்புக்குமுரிய பங்குத்தந்தை அருட்பணி ஞானறூபன் அடிகளாரால் அன்னையின் திருவுருவக்கொடி வானுயர ஏற்றப்பட்டு 16.05.2025 அன்று நவநாட்கள் ஆரம்பமானது.
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் ஆயத்தமாக கொடிமரம் பங்குத்தந்தை அருட்பணி ஞானறூபன் அடிகளாரால் ஆசீர் வதிக்கப்பட்டு ஆலய சமூகமாக ஒன்றினைந்து கொடிமரத்தினை ஏற்றியதன் பதிவுகள்...
மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயமுதல் நன்மை கொண்டாட்ட நிகழ்வு 11.05.2025அன்று இடம் பெற்றது. இன்நிகழ்வுக்கு சிறார்களை ஆயத்தம் செய்த மறைஆசிரியர் செல்வறாணி அவர்களுக்கும், மதிப்பார்ந்த பங்குத்தந்தை ஞானறூபன் அடிகளாருக்கும்,பாடகர் குழாமினருக்கும், தனது இசைஅமைப்பால் திருப்பலியினை மெருகூட்டிய செல்வன் தர்சன் அவர்களுக்கும் , ஒலி அமைப்பாளர் செல்லன் றொகான்,அவர்களுக்கும், மனமார்ந்த நன்றிகளை மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலய திருஅவை சார்பாக கூறி நிற்கின்றோம். நன்றிகள் பல