ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் எமது மாதகலூருக்கும்..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞ...



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் சிங்கப்பூரிலிருந்து வெளியிடப்படும் முன்னணி ‘ஆசிய விஞ்ஞானி’ எனும் சஞ்சிகை (Asian Scientist Magazine) இன் "ஆசிய விஞ்ஞானி" - 100 (Asian Scientist – 100) பட்டியலில் (https://www.asianscientist.com/as100/) இடம் பெற்றுள்ளார்.



ஆண்டுதோறும் வெளியிடப்படும் இந்த பட்டியல் ஆசியாவிலுள்ள தலைசிறந்த விஞ்ஞானிகளின் விசேட சாதனைகளை அங்கீகரிக்கிறது. பொதுவாக இந்த பட்டியலில் தேர்வு செய்யப்படும் தலைசிறந்த விஞ்ஞானிகள் அவர்களின் தரமான ஆய்வு வெளியீட்டுக்கப்பால் தேசிய அல்லது சர்வதேச விருதை பெற்றிருக்க வேண்டும். பதிலாக முக்கியமான விஞ்ஞான கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டிருக்க வேண்டும் அல்லது கல்விசார் அல்லது தொழில்சார் தலைமைத்துவத்தை வழங்கியிருக்க வேண்டும்.




விஞ்ஞானப் பீடாதிபதியாக கடந்த ஜந்து ஆண்டுகள் பணியாற்றிவரும் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் பல தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவற்றில் துணைவேந்தர்கள் இயக்குனர்கள் சபையினரால் (CVCD) வழங்கப்பட்ட பௌதிக விஞ்ஞானத்திற்கான அதி சிறந்த இள ஆராய்ச்சியாளர் விருது தேசிய விஞ்ஞான மன்றத்தினால் (National Science Foundation, NSF) வழங்கப்பட்ட இள விஞ்ஞானி விருது மற்றும் தேசிய ஆராய்ச்சி பேரவை (National Research Council, NRC) பல தடவைகள் வழங்கிய சிறந்த ஆராய்ச்சி வெளியீட்டுகளுக்கான ஜனாதிபதி விருதுகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவரின் ஆய்வுக் கட்டுரைகள் உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் அதிகளவு மேற்கோளிடப்பட்டு வருகின்றன.



சர்வதேசத்தரத்திலான இவரது ஆய்வுச் செயற்பாடுகளினால் ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள்
எமது மாதகலூருக்கும் இலங்கை தமிழருக்கும், இலங்கைத் தாய்நாட்டிற்கும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு மட்டுமல்லாது யாழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ளார். அவரை நாம் எல்லோரும் பாராட்டுவோம். மேலும் அவர் உலகில் உயரிய நிலையை அடைய எமது 
வாழ்த்துக்கள் பேராசிரியருக்கு.


  









Nom

AnjaneyarTemple,1,ArasadeSithiVinayagar,17,Articles,2,AryankavuAyyappan,3,BharathiSanasamuka.N,2,Canada,1,Canada.M.n.m.o,16,Denmark,6,F.M.P.ThomaiyarOnriyam,5,France,34,Gandhiji.P.School,6,GanthigySanasamuka.N,10,Germany,35,HinduSamaiyaA.s,1,Hospitel,3,IlaignarSanasamuka.N,3,Italy,1,jana,13,KalaivaaniSanasamuka.N,1,KalviApiViruthi.S,24,KanchipuramVairavar,2,LiveTv,112,London,4,LurthuMaathaKevi,7,Makkalval,76,mathagal,72,Mathagal NalanPuri.S,13,Net,2,Nunasai.V,36,NunasaiMurugan,19,Obituaries,165,PaanavaddyAmman,20,RajaRajeshwary,6,S.k.kGnanavairavar,4,Sahayapuram,43,SampunathaEswaram,2,SithiVinayagar.P.S,19,SivanKovil,27,St.AntonysChurch,6,St.Joseph,38,St.SebastiansChurch,3,St.Soosaiyappar.C,3,St.Thomas Church,15,St.Thomas.P.School,11,St.Thomas.R.C.G,24,St.thomasunaited,6,stjoseph sports,1,Swiss,5,Udayatharakai.C.C,1,Uthayatharagai.p,1,VanniVinayakar,8,Veerapathirar,1,Vigneswara,29,VinayagarSportsClub,19,VipulanantharPadippakam,2,wishes,45,
ltr
item
mathagal.net: ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் எமது மாதகலூருக்கும்..!
ஆசியாவின் தலைசிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக தெரிவாகியுள்ள சிரேஷ்ட பௌதிகவியல் பேராசிரியர் புண்ணியமூர்த்தி ரவிராஜன் அவர்கள் எமது மாதகலூருக்கும்..!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTD1USRqpBHIz1dDtI8hiG12ZnrlR5Iw8UPJemuoKZypghIvIG5fvMmH3aqRY5SqRRMRxGpkkqL3C36Rv0no5lemzaexeG-SduvhosWqEgN3Ki7z6yG4W1zlVS1tQVuxq82fBFCMLf-O9QmphwnNTmpyKZsxCaXKvZzyg2xfAEY5lebitoT02vcmdXCBQ/s16000/Punniamoorthy%20Ravirajan%20%E2%80%93%20Asian%20Scientist%20Magazine%20(1).png
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiTD1USRqpBHIz1dDtI8hiG12ZnrlR5Iw8UPJemuoKZypghIvIG5fvMmH3aqRY5SqRRMRxGpkkqL3C36Rv0no5lemzaexeG-SduvhosWqEgN3Ki7z6yG4W1zlVS1tQVuxq82fBFCMLf-O9QmphwnNTmpyKZsxCaXKvZzyg2xfAEY5lebitoT02vcmdXCBQ/s72-c/Punniamoorthy%20Ravirajan%20%E2%80%93%20Asian%20Scientist%20Magazine%20(1).png
mathagal.net
https://www.mathagal.net/2025/05/Prof.P.Ravirajan.html
https://www.mathagal.net/
https://www.mathagal.net/
https://www.mathagal.net/2025/05/Prof.P.Ravirajan.html
true
337347710722968202
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy