உயர்திரு.விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி 17.05.2025ம் திகதி நடைபெற்ற கெளரவிப்பு விழா நன்றி நவில்கின்றோம்..(காணொளி இணைப்பு)..!
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமும், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமும் இணந்து திரு விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சேவைகளை பாராட்டி,...
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கமும், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கமும் இணந்து திரு விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சேவைகளை பாராட்டி, மதிப்பளித்து எடுத்த கௌரவிப்பு பெருவிழா சனிக்கிழமை 17-05-2025 அன்று மாதகல் இளைஞர் சங்க கலையரங்கதில் இடம்பெற்றது.
முதலில் ஆசியுரையினை மாதகல் பாணாகவெட்டி புவனேஸ்வரி அம்பாள் ஆலய குரு சிவஸ்ரீ செ. சுந்தரேஸ்வர சர்மா அவர்களும், மாதகல் பங்குத்தந்தை அருட்பணி செ. றோய் பேடினன் அவர்களும் வழங்கினார்கள்.
இந்த விழாவிற்கு வருகை தந்ந அனைவரையும் அன்புடன் வரவேற்று, மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு மு. திருக்குமார் [மயூரன்] அவர்கள் வரவேற்புரையினை வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வின் தலைமையுரையினை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு சா. ஞானானந்தன் [ஞானா] அவர்கள் வழங்கினார்.
இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுனர் திரு நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் கலந்து கொண்டு விழா நாயகனிற்கு புகழாரம் சூட்டியமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்துடன் சிறப்பு விருந்தினராக சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் அவர்களும் கலந்து கொண்டு விழா நாயகனின் சிறப்புக்களை கூறியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
மற்றும் கௌரவ விருந்தினர்களாக பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளர் திரு வீ. குகரவீந்திரநாதன் - றவி அவர்களும், நிர்வாக உறுப்பினர் திரு மு. ஞானசீலன் -ஞானி அவர்களும், கலை, கலாச்சார பொறுப்பாளர் திரு த. நந்தகுமார் - நந்தன் அவர்களும், சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தினை சேர்ந்த திரு வீ. பாலசுப்பிரமணியம் - சிவா அவர்களும், திரு வே. தயாபரன் - தயா அவர்களும், கனடா நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தினை சேர்ந்த திரு வீ. வேலுப்பிள்ளை அவர்களும், திரு வீ. தணிகாசலம் அவர்களும், மற்றும் புலம்பெயர் நலன்புரி, சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பெரும் திரளான மாதகல் கிராம மக்களும் பங்குபற்றி இந்த நிகழ்வினை சிறப்பித்தார்கள்.
இந்த விழாவினை நடாத்திட
கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம்,
சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்,
பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம்,
டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம்,
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், மக்கள் வாழ உதவும் நிறுவகம், 'சமூக சேவகர்" திரு பூ. அன்பழகன் ஆகியோர் இணைந்து செயற்பட்டனர்.
மக்கள் வாழ உதவும் நிறுவகம் மாலை நேர சிற்றுண்டிகள், இரவு நேர உணவுகளை இவ்விழாவிற்கு வந்த அனைவரிற்கும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த விழாவினை திறம்பட நடாத்த மாதகல் விநாயகர் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் முன்னின்று உழைத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இன்றய நிகழ்வின் "மாதகல் விடிவெள்ளி" திரு சிற்றம்பலம் அவர்களிற்கான விசேட நூல் வெளியீட்டிற்குரிய முழுச் செலவினையும் ஜேர்மனி நாட்டினைச் சேர்ந்த "சமூக சேவகன்" திரு பூ. அன்பழகன் அவர்கள் பொறுப்பெடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு மா. ஜெறாட் அவர்கள் நிகழ்வினை திறம்பட தொகுத்து வழங்கியிருந்தார்.
நேர்மை – வெளிப்படைத்தன்மை – எளிமை இவையே சிற்றம்பலம் ஐயாவின் அடையாளங்கள். அவரை முன்மாதிரியாகக்கொண்டு இளையவர்கள் அவரின் வழித்தடத்தை பின்தொடரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
மாதகலைச் சேர்ந்த விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூகசேவைகளைப் பாராட்டி மதிப்பளித்து அவரின் வாழ்நாள் சாதனைகளை வாழும்போதே வாழ்த்தும் கௌரவிப்பு விழாவும் நூல் வெளியீடும் மாதகல் இளைஞர் சங்க கலையரங்கத்தில் இன்று சனிக்கிழமை (17.05.2025) இடம்பெற்றது.
விழா நாயகன் மற்றும் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் வரவேற்றுச் செல்லப்பட்டனர். இதன் பின்னர் மேடை நிகழ்வுகள் நடைபெற்றன.
பிரதம விருந்தினராகப் பங்கேற்ற ஆளுநர் தெரிவித்ததாவது, இந்த மாதகல் மண்ணுக்கு நான் பிரதேச செயலராக, மாவட்டச் செயலராக இருக்கும்போது வந்திருக்கின்றேன். இப்போது ஆளுநராகிய பின்னர் இரண்டாவது தடவையாகவும் வருகின்றேன். ஒவ்வொரு தடவையும் வரும்போதும் எனக்கு பிரதேச செயலராக இங்கு கடமையாற்றிய நினைவுகளே வருகின்றன. அந்தப் பயங்கரமான காலத்தில் கெடுபிடிகளுக்கு மத்தியில் இங்கு வந்து சென்றிருக்கின்றேன்.
வெளிநாட்டிலிருந்து வந்து இங்கு உரையாற்றியவர்கள் சிற்றம்பலம் ஐயாவைப்பற்றி ஒரு விடயத்தைக் குறிப்பிட்டிருந்தனர். அவரின் வெளிப்படைத்தன்மை பற்றி சிலாகித்திருந்தனர். ஒரு சதத்துக்கும் கணக்குக்காட்டக் கூடிய ஒருவர். இன்று இவ்வாறான வெளிப்படைத்தன்மையானவர்களைக் காண்பது அரிது. ஒரு நிறுவனம் வளர்ச்சியடைவதற்கு வெளிப்படைத்தன்மை முக்கியம். வெளிப்படைத்தன்மை இருந்தால்தான் வெளிநாடுகளிலுள்ளவர்கள் உதவிகளைச் செய்வார்கள்.
சிற்றம்பலம் ஐயாவிடம் சிறந்த ஆளுமையும் தலைமைத்துவமும் இருக்கின்றது. அவர் யாரிடமும் சத்தமாகப் பேசமாட்டார். மக்களிடத்தில் அன்பாக நடந்துகொள்ளும் ஒருவர். அதனால்தான் இன்று ஊரே அவருக்கான கௌரவிப்பு விழாவுக்கு திரண்டு வந்திருக்கின்றது.
இன்று ஒரு நிறுவனம் சிறப்பாக இயங்குகின்றது என்றால் உடனே அங்கே புல்லுருவிகளும் வந்துவிடுவார்கள். அவர்கள் அந்த நிறுவனத்திலிருந்து எப்படி உழைக்கலாம் என்றே சிந்திப்பார்கள். இதனால் நாளடைவில் அந்த நிறுவனங்கள் வீழ்ச்சியடைகின்றன. ஆனால் உங்கள் சிற்றம்பலம் ஐயாவால் ஊரிலுள்ள பல நிறுவனங்களும் இன்றும் சிறப்பாக இயங்குகின்றன.
அவர் தனது இந்த 82 வயதிலும் ஊருக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றார். அப்படிப்பட்ட ஒரு மனிதரை ஊரே திரண்டு கௌரவிப்பது என்பது பாராட்டக்கூடியது. அவர் தொடர்ந்தும் ஊருக்கு சேவையாற்றவேண்டும், என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் 'கந்தன் அலங்காரம்' மற்றும் 'மாதகலின் விடிவெள்ளி' ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன.
சண்டிலிப்பாய் பிரதேச செயலர் திருமதி சுபாஜினி மதியழகன் மற்றும் சமயத் தலைவர்கள், புலம்பெயர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் பங்கேற்றனர்.
mathagal.net: உயர்திரு.விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி 17.05.2025ம் திகதி நடைபெற்ற கெளரவிப்பு விழா நன்றி நவில்கின்றோம்..(காணொளி இணைப்பு)..!
உயர்திரு.விசுவநாதர் சிற்றம்பலம் அவர்களின் சமூக சேவையைப் பாராட்டி 17.05.2025ம் திகதி நடைபெற்ற கெளரவிப்பு விழா நன்றி நவில்கின்றோம்..(காணொளி இணைப்பு)..!
Loaded All PostsNot found any postsVIEW ALLReadmoreReplyCancel replyDeleteByHomePAGESPOSTSView AllRECOMMENDED FOR YOULABELARCHIVESEARCHALL POSTSNot found any post match with your requestBack HomeSundayMondayTuesdayWednesdayThursdayFridaySaturdaySunMonTueWedThuFriSatJanuaryFebruaryMarchAprilMayJuneJulyAugustSeptemberOctoberNovemberDecemberJanFebMarAprMayJunJulAugSepOctNovDecjust now1 minute ago$$1$$ minutes ago1 hour ago$$1$$ hours agoYesterday$$1$$ days ago$$1$$ weeks agomore than 5 weeks agoFollowersFollowTHIS CONTENT IS PREMIUMPlease share to unlockCopy All CodeSelect All CodeAll codes were copied to your clipboardCan not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy