முன்னைநாள் கோட்டக்கல்விப்பணிப்பாளரும் தற்போதைய மாதகல் நலன்புரிச்சங்க தலைவருமான திரு.வி.சிற்றம்பலம் ஐயா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவைகளுக்...
முன்னைநாள் கோட்டக்கல்விப்பணிப்பாளரும் தற்போதைய மாதகல் நலன்புரிச்சங்க தலைவருமான திரு.வி.சிற்றம்பலம் ஐயா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க சேவைகளுக்கான மதிப்பளித்தல் நிகழ்வை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கும் வளர்ந்தோருக்கும் நடத்தப்படவுள்ள
போட்டிகள்..
போட்டிகள்..



மாதகல் கிராமத்திலுள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள், பொது அமைப்புக்கள், சங்கங்கள், ஒன்றியங்கள், சனசமூக நிலையங்கள், விளையாட்டுக்கழகங்கள் ஏனைய செயற்பாட்டு கட்டமைப்புகளின் போன்றவற்றின் அதிபர்கள், தலைவர்கள் என அனைவரும் ஒன்றுகூடி
ஓய்வுநிலை கோட்டக்கல்விப்பணிப்பாளரும் தற்போதைய மாதகல் நலன்புரிச்சங்க தலைவரும் மாதகல் கிராம சமூக பணிகளில் முனைப்புடன் செயற்பட்டு வருபவருமான திரு. வி. சிற்றம்பலம் ஐயா அவர்களுக்கான மதிப்பளித்தல் நிகழ்வு தொடர்பாக நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.
இச்சந்திப்பானது 03.04.2025 (வியாழக்கிழமை) மாலை 04.00 மணிக்கு மாதகல் நலன்புரிச்சங்க செயலகத்தில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம்
இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கம்
ஓய்வு நிலைகோட்டக்கல்விப் பணிப்பாளரும் தற்போதைய மாதகல் நலன்புரிச்சங்க தலைவருமான திரு.வி.சிற்றம்பலம் ஐயா அவர்களின் தன்னலமற்ற சேவைகளினால் மாதகல் கிராமமும் மக்களும் பயன்பெற்றமையை நினைந்து இவரை பாராட்டியும் இவரது நேரம் காலம் பாராத அர்ப்பணிப்புமிக்க அளப்பரிய செயற்பாடுகளுக்கு இவர் வாழும் காலத்திலே அதிஉயர்வான மதிப்பளித்தலை வழங்கும் நோக்கிலும் ஓர் மகத்துவமான நிகழ்வு ஒன்றினை மாதகல் நலன்புரிச்சங்கமும் மாதகல் கல்வி அபிவிருத்திச்சங்கமும் ஒன்றிணைந்து வெளிநாட்டிலுள்ள ஐந்து நலன்புரிச்சங்களின் ஆதரவுடன் எதிர்வரும் மே மாதம் 17ம் திகதி மாதகல் மண்ணில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தவகையில் இந்த நிகழ்வை சிறப்புற நடாத்துவதற்கு மாதகலிலுள்ள அனைத்து சங்கங்கள், பொது அமைப்புக்கள், இவர் சார்ந்த அமைப்புக்கள். சமூக ஆவலர் ஜேர்மன் வாழ் திருபூ.அன்பழகன், மாதகல் மக்கள் வாழ உதவும். நிறுவகம், மாதகல் மக்கள் வாழ உதவும் நிறுவகம் மாதகல் கிளை, வெளிநாடுகளில் இயங்கும் வேறு அமைப்புக்கள், மாதகல் கிராமத்தின் முன்பள்ளிகள். பாடசாலைகள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் போன்றவற்றின் பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பாத்து நிற்கின்றோம்.
நிகழ்வுகள் பற்றிய விபரங்கள் தங்களுக்கு பின்னர் அறியத்தரப்படும். இந்நிகழ்வில் தங்களது ஆதரவை வழங்கி பங்குபெற்ற விருப்பமுடையவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளுமாறும் அன்பாக கேட்டுக்கொள்கின்றோம்.