31ம் நினைவஞ்சலி குடும்பத்தின குலவிளக்காய் அன்பின் திருவுருவாய் பாசமிகு கணவனாய்,தந்தையாய்,மாமனாய், பேரனாய்,பூட்டனாய் எம்மை அரவணைத்துக் காத்தா...
31ம் நினைவஞ்சலி
குடும்பத்தின குலவிளக்காய்
அன்பின் திருவுருவாய்
பாசமிகு கணவனாய்,தந்தையாய்,மாமனாய்,
பேரனாய்,பூட்டனாய் எம்மை அரவணைத்துக் காத்தாய்
கணீரென்ற குரலால் பல கதை பேசி மகிழ்ந்தாய்
நீங்கள் நோயினால் பட்டதுன்பம் காணுமென்றோ
இறைவன் தன்னிடம் அழைத்துக் கொண்டான்
நீங்கள கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்
எங்கள் நினைவுகளில் அணையாத விளக்காய் உயிர் வாழ்வீர்கள்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!🙏🙏🙏
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும்,தொலைபேசியூடாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும்,அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் எமது குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.