6ஆவது வருடத்தில் "வீரா மென்பந்துச் சுற்றுத் தொடரின் மாதகல் பெரும் சமரில் " - Groupe : B விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன...
6ஆவது வருடத்தில் "வீரா மென்பந்துச் சுற்றுத் தொடரின் மாதகல் பெரும் சமரில் " - Groupe : B
விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் முன்னைய அதிபர் ] அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த மாபெரும்
"வீரா மென்பந்து சுற்றுத்தொடரின் »
இன்றைய [22-03-2025 ] நிகழ்வில் குழு B இல் 8 கழகங்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்த குழுவின் இறுதியாட்ட முடிவில் மல்லாகம் ஸ்டார் விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை 29-03-2025 அன்று குழு C இல் உள்ள 8 கழகங்கள் சமர் செய்ய உள்ளனர்.
1ம் பரிசு : - நாற்பதாயிரம் ரூபாய் (40000/= )💵💴💰, வெற்றிக்கேடயம்🏆
2ம் பரிசு : - முப்பதாயிரம் ரூபாய் (30000/=)💸💷💰, வெற்றிக்கேடயம்🏆
6ஆவது வருடத்தில் "வீரா மென்பந்துச் சுற்றுத்தொடர்"
2025ஆம் ஆண்டில், 6ஆவது வருடாந்த நிகழ்வாக 15-03-2025 அன்று ஆரம்பமாகியது « மாதகல் பெரும் சமர்”
இன்றைய முதல் நாள் நிகழ்வினை அமரர்களான திரு, திருமதி வீரவாகு கனகாம்பிகை அவர்களின் மகள் திருமதி கிருஸ்ணராசா தவஈஸ்வரிதேவி [தேவி] அவர்கள் மங்கல விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
விநாயகர் விளையாட்டுக்கழகம் பெருமையுடன் நடாத்தும் [மாதகல் விக்னேஸ்வரா பாடசாலையின் முன்னைய அதிபர் ] அமரர் கணபதிப்பிள்ளை வீரவாகு அவர்களின் ஞாபகார்த்த மாபெரும்
"வீரா மென்பந்து சுற்றுத்தொடரின் » இன்றைய நிகழ்வில் குழு A இல் 8 கழகங்கள் பங்குபற்றியிருந்தனர்.
இந்த குழுவின் இறுதியாட்ட முடிவில் காந்திஜி விளையாட்டுக் கழகம் அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை 23-03-2025 அன்று குழு B இல் உள்ள 8 கழகங்கள் சமர் செய்ய உள்ளனர்.
1ம் பரிசு : - நாற்பதாயிரம் ரூபாய் (40000/= ), வெற்றிக்கேடயம்
2ம் பரிசு : - முப்பதாயிரம் ரூபாய் (30000/=), வெற்றிக்கேடயம்
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் விநாயகர் விளையாட்டுக் கழகத்தின் 2025 ஆம் ஆண்டின் பொங்கல் விழாவில் அமரர் திரு சபா அருட்சுப்பிரமணியம் அவர்களின் ஞாபகார்த்தமாக, 2ஆவது வருடாந்த நிகழ்வாக " பாரம்பரிய விளையாட்டு " போட்டிகளை நடாத்துவதற்கு ஒரு இலட்சத்து நாற்பத்தையாயிரம் [1,45,000]ரூபா 14-01-2025 அன்று வங்கி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.இப்பணத்தினை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் விநாயகர் விளையாட்டுக் கழகத்திடம் கையளித்தார்.