பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 7ஆவது வருடாந்த நிகழ்வாக இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினூடாக 24-11-2024 அன்று மாதகலில் நடாத்திய "பச...
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம் 7ஆவது வருடாந்த நிகழ்வாக இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினூடாக 24-11-2024 அன்று மாதகலில் நடாத்திய "பசுமையில் மாதகல்" நிகழ்விற்கு ஏற்பட்ட முழுச்செலவுத் தொகையான மூன்று இலட்சத்து முப்பத்தெண்ணாயிரத்து தொளாயிரம் [3,38,900]ரூபாவினை பொறுப்பெடுத்துக்கொண்டது.
எமது கிராம மக்களிற்கு இலவசமாக, பயனுள்ள, மரக்கன்றுகளை வழங்கியதன் மூலம், எமது பூமித்தாய்க்கு ஓர் சிறிய உதவியினை செய்யும் அதேவேளை, அவர்களின் குடும்பங்களும் பயன்பெறுவதை எண்ணி நாம் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் / பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்