உலக நீர்வள நாள் (22/03/2025) அருகி வருகின்ற நீர் வளத்தின் சகல திட்டங்களையும் அதன் பராமரிப்பு நிர்வாகத்தை விருத்தி செய்து நீர் வளப...
உலக நீர்வள நாள்
(22/03/2025)
அருகி வருகின்ற நீர் வளத்தின் சகல திட்டங்களையும் அதன் பராமரிப்பு நிர்வாகத்தை விருத்தி செய்து நீர் வளப் பாதுகாப்பை நன்கு வலுப்படுத்தி நாளாந்தம் பெரும் சவாலாக அமைந்து வருகின்ற நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதே உலக நீர் தினம் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கம் ஆகும். அதன் அடிப்படையில்இன்றையதினம் மாதகல் மேற்கு யா/152 கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சம்பில் துறை புனித சூசையப்பர் ஆண்டகை வளாகம் புனித சூசையப்பர் கடற்றொழிலாளர் அமைப்பு வளாகம் என்பன சிரமதானப் பணி மூலம் துப்புரவு செய்யப்பட்டது. இன் நிகழ்வில் தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்கள உத்தியோகத்தர்கள். கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மாதகல் மேற்கு நீர்ப்பாவனையாளர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக நலன் விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
எதிர்காலத்தில் இவ்வாறான சமூக முன்னேற்றச் செயல் திட்டங்களில் அனைவரையும் ஒன்றிணையுமாறு அன்புடன் வேண்டி நிற்கின்றேன்.
கிராம அலுவலர்.