உலகம் எங்கும் வாழும் எம் மாதகல் உறவுகள் தைப்பொங்கல் தினத்தன்று சூரியனை வழிபட்டு, பொங்கல் பொங்கி உழவர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடினர்..! மண்...
உலகம் எங்கும் வாழும் எம் மாதகல் உறவுகள் தைப்பொங்கல் தினத்தன்று சூரியனை வழிபட்டு, பொங்கல் பொங்கி உழவர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடினர்..!
மண் வாசனையோடு ஏர் கலப்பைகளை சுமந்து... நாம் இன்பமாய் உணவுண்ண விவசாயிக்கு... தோள்கொடுக்கும் எருதுகளை போற்றுவோம்...
தைத்திருநாள் வாழ்த்து! அன்பான என் உறவே! தமிழர்கள் வாழ்வில் தைத்திருநாள் என்பது மாற்றங்களைக் கொண்டுவரும் ஒரு நாள்.! பழையன கழிந்து புதியன புகும் ஒரு நாள்.! அனுபவித்த துன்பங்கள் அத்தனையும் முடிவடைந்து நல்லவைக்கு வழி பிறக்கும் ஒரு நாள்.! நிலம், நீர், ஆகாயம், தீ, காற்று, என்று உயிர்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருக்கும் ஐம்பூதங்களுக்கும் சேர்த்து கமக்காரர்களான என் உறவுகளுக்கும் நன்றி செலுத்தும் இந்த நாளில் என் உறவான உங்களையும் நெஞ்சில் நிறுத்தி நெஞ்சார தைத்திரு நாள் வாழ்த்துச்சொல்லி எனி நீங்கள் வாழ்கின்ற ஒவ்வொரு நாளும், நிறைவேறா ஆசைகள் நிறைவேற வேண்டுமென்றும் அத்தனை உயிர்களும் அன்பு பெருகி வாழ்ந்திடவும் உலகமெங்கும் சமாதானம் உயிர்ப்புடனே பெருகிடவும் சந்தோசம் மட்டுமே சமகால நிகழ்வாக அமைய அத்தனை மனிதர்களுக்கும் ஆசிகள் வழங்கி பொங்கல் வாழ்த்துக்களையும் அன்புடன் கையளித்து ஒவ்வொரு உறவுகளினதும் முகங்களில் சந்தோசத்தைக்காண காத்திருக்கிறோம்.