"எமது வெற்றியே எமது அடையாளம்" எமது மாதகல்.கொம் இணையத்தளத்தின் ஸ்தாபகர் நற்குணசிங்கம் செல்வக்குமார் அவர்களின் மகள் 5ம் ஆண்டு புலம...
"எமது வெற்றியே எமது அடையாளம்"
எமது மாதகல்.கொம் இணையத்தளத்தின் ஸ்தாபகர் நற்குணசிங்கம் செல்வக்குமார் அவர்களின் மகள் 5ம் ஆண்டு புலமைப்பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் சாதனை...
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்ற மாணவி வேணியா செல்வகுமார் 184 புள்ளிகளை பெற்று சாதித்து காட்டியுள்ளார். இம் மாணவியை விட நான்கு புள்ளிகளே அதிகம் பெற்ற ஒரு மாணவி முதலிடம் பெற்றுள்ளார்.
இவர் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூலம் பரீட்சை எழுதிய மாணவர்களில் முதலாவது இடத்தையும், சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளில் பரீட்சை எழுதிய மாணவர்களில் கொழும்பில் இரண்டாம் இடத்தையும், அகில இலங்கை மட்டத்தில் முதல் 30 மாணவர்களுக்குள் வந்துள்ளார்.
அதிகூடிய புள்ளிகளான 188 புள்ளிகளை ஹொரணை ரோயல் கல்லூரியின் பிசந்தி யெவின்யா என்ற ஒரு மாணவி பெற்றுள்ளார், 17 மாணவர்கள் 187 முதல் 186 வரையான மதிப்பெண்களை பெற்றுள்ளார்கள்.
உண்மையாகவே மாணவியின் பயிற்சியும், அர்பணிப்புமே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம், அத்தோடு இம் மாணவியின் பெற்றோர், பாடசாலை ஆசிரியர், மற்றும் இறுதி சில மாதங்கள் பல மாதிரி வினாத்தாள்களை செய்த ஆசிரியரும் தான் முக்கிய காரணம்.
உண்மையாகவே இவர் கொழும்பில் வசித்தாலும் இவரது தந்தை எமது மாதகல் கிராமத்தைச் பூர்வீகமாக கொண்டவர் என்பதால் இம் மாணவியின் வெற்றி எம் மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளது.
இந்த மாணவி தான் தனது கொப்பியில் எழுதியிருந்தாள் "எமது வெற்றியே எமது அடையாளம்" என்று, இன்று அதை மாணவி சாதித்து காட்டிவிட்டாள்.
மேலும் பல வெற்றிகளை பெற்று எதிர்காலத்தில் நல்ல ஒரு நிலைக்கு வர மாணவி செல்வகுமார் வேணியா அவர்களுக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் அதேவேளை, இம் மாணவியை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கும் எமது நன்றிகள்.