எமது மாதகல் கிராமத்தைச் சேர்ந்த மாணவி எமறன்லோறிஸ்நிக்ஷன்.மேரிஆன்தனேசிகா இந்தியா அண்ணாமலை பல்கலைகழகத்தில் கல்வி கற்று மக்கள் எழுத்தாளர் எனும...
எமது மாதகல் கிராமத்தைச் சேர்ந்த மாணவி எமறன்லோறிஸ்நிக்ஷன்.மேரிஆன்தனேசிகா இந்தியா அண்ணாமலை பல்கலைகழகத்தில் கல்வி கற்று மக்கள் எழுத்தாளர் எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்...
புலம்பெயர் தேசம் சென்று சாதனை புரிந்து தான் கற்ற கல்விக்கும் எம் மண்ணிற்கும் பெருமை சேர்த்திட்ட
மாணவி எமறன்.தனேசிகா அவர்கட்கும் பயிற்றுவித்த ஆசிரிய பெருந்தகைகளுக்கும் மாதகல் இணையத்தளம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி நிற்கின்றது.
இலங்கையின் யாழ்ப்பாண பகுதியில் இருந்து ஓர் எழுச்சிக் குயில் இல்லை இல்லை
எழுச்சிப் புயல் புரட்சிக் குரலாக மிரட்சி தொணிக்கும் சமுதாய சீர்கேடுகளை தோலுரிருக்கும் ஈழத்தின் வாடை பீறுநடை கம்பீரமாக
தமிழ் தளங்களில் தமிழ் நாட்டின் கவித் தளங்களில் வெற்றி பவனி வருகிறார் குறளோவியத்தின் உலகச் சாதனை நிகழ்விலே ஒப்பற்ற கருத்தாளராக களமிறங்கியவர் திண்டுக்கல் தமிழ் சங்கம் கவியரங்க மேடையை அதிரவைத்தார்
பாரெங்கும் தமிழிசையை ஒலிக்க செய்த அக்குரல் சமுகத்தில் தமிழ் வளர்ச்சி பற்றிய பட்டிமன்றத்திலே தமிழ் நாட்டிலே இன்றைய தமிழின் நிலையை கண்டு பொங்கி எழுந்தார், இளந்தலைமுறையின் கலப்படத் தமிழை களத்திலே படம் பிடித்து வெளிக்காட்டிய மதிப்பிற்குரிய முதுகலைத் தமிழ் பட்டதாரி மாணவி ஆன் மேரி தனேசிகா எமறன் தாய்மொழி உறவுகள் மற்றும் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காட்ஸ் இணைந்து நடத்திய தமிழின் தமிழர்களின் வாழ்வியலை பறைசாற்றும் சிலப்பதிகாரம் பல்சுவை தொடர் கருத்தரங்கம் நிகழ்வில் பங்கேற்று
சிலப்பதிகாரம் கூறும் பண்பாட்டை, தமிழின் இலக்கிய நயத்தை இளங்கோவடிகளின் எழுத்தின் மேலாண்மையை
கண்ணகியின், கோவனின், மாதவியின், மன்னனின் கதாபாத்திரங்கள் கூறும் வாழ்வியல் தத்துவங்களை ஆராய்ந்து நிகழ்வில் அரங்கேற்றிய கவிஞர் (ஈழத்துநிலா) ஆன் மேரி தனேசிகா அவர்களுடைய கருத்து பரிமாற்றம் நிகழ்விலே உயரிய இடத்தை பெற்று விட்டது பல கவிஞர்கள் சிலப்பதிகாரம் உணர்த்தும் கருவை கற்று கொள்ள பேரூதவியாக அமைந்தது.
கவிஞரின் தமிழ் பணி இலக்கிய பணி மென்மேலும் சிறக்க தாய்மொழி உறவுகள்
வாழ்த்தி மகிழ்கின்றோம்.
கவிஞர் தனேசிகாஎமறன் அவர்களுக்கு
ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்காட்ஸ் சிலப்பதிகார நிகழ்வில் பங்கேற்று சிறப்பாக உரை தந்தமைக்கு
உலகச் சாதனை சான்றிதழ் மற்றும் சிலப்பதிகாரச் சிற்பி
என்ற விருதும் வழங்கி பெருமைபடுத்துகின்றோம்.
தாய்மொழி உறவுகள்
வாழ்த்துகள்
அன்புடன்
முத்துவேலு பிரின்ஸ் ராமு,
நிறுவனர்,
தாய்மொழி உறவுகள்,
சென்னை,
தமிழ் நாடு,
இந்தியா.