20.01.2024ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06.30 மணிக்கு திருவிழாத் திருப்பலி பங்குத்தந்தை செ.றோஜ் பேடினன் வழிநடத்தலில் அருட்பணி ரவிராஜ் அடிகளாரி...
20.01.2024ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06.30 மணிக்கு திருவிழாத் திருப்பலி பங்குத்தந்தை செ.றோஜ் பேடினன் வழிநடத்தலில் அருட்பணி ரவிராஜ் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்று தாெடர்ந்து புனிதரின் தேர்ப்பவனியும் ஆசீரும் இடம்பெற்றது.
மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய திருவிழா - 2025
19.01.2025ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு திருச்செபமாலையுடன் நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெற்றது.
20.01.2024ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06.30 மணிக்கு திருவிழாத் திருப்பலியும் புனிதரின் தேர்ப்பவனியும் ஆசீரும் இடம்பெறும்.
புனிதரின் வழியாக இறைவனின் அருளைப் பெற்று இறையுறவில் வளமுடன் வாழ பக்தர்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
பங்குத்தந்தை, பங்கு மக்கள்,
புனித செபஸ்ரியார் ஆலயம் - மாதகல்.
மாதகல் புனித செபஸ்ரியார் ஆலய வருடாந்த பெருவிழா -2025
இதன் ஆயத்தநாள்களின் முதல் நாள் வழிபாடுகள் 11.01.2025 அன்று மாலை 5:30 மணிக்கு பங்குத்தந்தை செ.றோய்பேடினன் அவர்களின் வழிநடத்தலில் அமலமரித்தியாகிகள் சபையின் சிறிய குருமடத் தலைவர் அருட்பணி றாஜ் கிளேயர் அவர்களின் தலைமையில்
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது...
அதன் சில பதிவுகள்...
மாதகல் செபஸ்தியார்
பெருநாள்...
யாழ்குடா பெருமையுடன்
பெயர் சொல்லும்
இயற்கை எழிலும்
கடல் வளமும்
பாங்கான மக்களும்
நிறைந்த மாதகல்லின்
புகழ் தன்னை...
மாதகல் மண்ணிலே
மாதவம் செய்தோம்
செபஸ்தியார் ஆலயம்
கொள்ள
நாங்கள் பாவங்கள்
களைந்தோம்...
யேசு நாதர்
திருவடியில் எங்கள்
மனக்குறை போக்க
உங்கள் பார்வையில்
எம்மை
காத்திருப்பீரே...
பாவமும் சாபமும்
போக்கவென்றே
பாரினில் உதித்த
கிறிஸ்துவே
கோபமும் கொலையும்
கொண்டலையும்
மக்களை மாற்ற
உயிர்த்தீரே...
உலகெங்கும்
உன்னைப் பாடும்
உயிர்களுக்கு உரிமை
தந்து
விலகாமல் உங்கள்
கரங்கள்
எங்களை காத்துநிற்க
வருவீரே...
பெருநாள் காணுகின்ற
செபஸ்தியாரே
எங்கள் பிணி போக்கி
வளம் யாவும்
வாழ்வில் கொடுக்க
வந்துதிப்பீரே
மண்ணிலே மீண்டும்...
Rajan Sharujan