மாதகல் மேற்கைச் சேர்ந்த அமரர்களான பர்த்தலோமை வெலிச்சோர், வெலிச்சோர் ஐடா கிளைமன்(வேவி) ஆகிய தம் பெற்றோர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களி...
மாதகல் மேற்கைச் சேர்ந்த அமரர்களான பர்த்தலோமை வெலிச்சோர், வெலிச்சோர் ஐடா கிளைமன்(வேவி) ஆகிய தம் பெற்றோர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவர்களின் ஆன்ம இளப்பாற்றிக்காக நினைவு நாளான இன்று 09.12.2024 J/152 மாதகல் மேற்கு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட 60 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை புலம்பெயர் தேசத்தில் வாழும் அன்னார்களின் பிள்ளைகள் வழங்கி வைத்து மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளித்துள்ளனர்.
இவர்கள் கடந்த வருடங்களிலும் இவ்வாறு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்களின் இச்சேவைதனை மாதகல் இணையத்தளம் சார்பாக பாராட்டுவதோடு இவர்களின் பெற்றோர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும் வேண்டுகின்றோம்.