இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தினதும், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தினதும் தலைமைச் செயலகத்தின் நிரந்தர பெயர்ப்பலகையின் திரைநீக்கம் - வியாழன்  28-11-2024

புலம் பெயர் தேசங்களில் வாழும் மாதகல் மக்களின் ஒத்துழைப்புடன் இயங்கிவரும் கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம்,  பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், சுவிஸ் மாதகல் நலன்புரிச் சங்கம், பிரித்தானியா மாதகல் நலன்புரிச் சங்கம், டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கம் ஆகியவற்றின் பூரண, கூட்டு முயற்சியில் இத் தலைமைச் செயலகக் கட்டிடமும், நிலமும் 15 வருடங்களிற்கு முன்பே வாங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நீண்ட கால முயற்சியின் பின்னர் வியாழன் 25-11-2024 அன்று காலை பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு குகரவீந்திரநாதன் [றவி] அவர்களாலும், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சிற்றம்பலம் அவர்களாலும், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் திரு அருள்ஞாணாணந்தன் அவர்களாலும் திரைநீக்கம் செய்யப்பட்டது.

இந் நிகழ்வில் மற்றும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் செயலாளர் திரு ஜெறாட் அவர்களும், உப தலைவர் திரு ஐங்கரன் அவர்களும், மாதகல் பொன்னுத்துரை நூலகத்தில் பணிபுரியும் திருமதி தர்சிகா அவர்களும், இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் திரு திருக்குமார் அவர்களும், கணக்காளர் திரு சுபாஸ்கரன் அவர்களும் கலந்து கொண்டனர்.