பிரான்ஸ் நாட்டில் மர்லி லு றுவா [Marly le Roi]எனும் நகரத்தில் இயங்கும் "இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூடத்தினால்" 6ஆவது வரு...
பிரான்ஸ் நாட்டில் மர்லி லு றுவா [Marly le Roi]எனும் நகரத்தில் இயங்கும் "இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூடத்தினால்" 6ஆவது வருடாந்த நிகழ்வாக நவராத்திரி விழா ஞாயிறு 17-11-2024 அன்று காலை 11 மணி முதல் மாலை 4மணி வரை Marly-le-Roi நகரசபை தந்துள்ள விழா மண்டபத்தில் நடைபெற்றது.
[நகரசபை விழா மண்டபத்தினை தந்த திகதியினை பொறுத்தே இவ்விழா நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம்
இடம் பெற்ற பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு ஆறுமுகநாவலர் அவர்களின் வரலாறு பற்றிப் பேசி வெற்றி பெற்ற செல்வன் சனோஜன், செல்வி அக்சயா
ஆகியோர் வைஷ்ணவி கடை உனிமையாளர் திரு ஞானசீலன் அவர்களினால் சிறப்பு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின் சில பதிவுகள் :
இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக் கூடம்
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்
பிரான்ஸ் வாழ் மாதகல் மக்களிற்கு முக்கிய அறிவித்தல் :
பிரான்ஸ் நாட்டில் மர்லி லு றுவா எனும் நகரத்தில் இயங்கும் "இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூடத்தினால்" 6ஆவது வருடாந்த நிகழ்வாக நடாத்தப்படும் நவராத்திரி விழாவானது ஞாயிறு 17-11-2024 அன்று காலை 11 மணியளவில் ஆரம்பமாகி மாலை 3 மணி வரை Marly-le-Roi நகரசபை தந்துள்ள விழா மண்டபத்தில் நடைபெறும்.
[நகரசபை விழா மண்டபத்தினை தந்த திகதியினை பொறுத்தே இவ்விழா நடைபெறுகின்றது]
பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் மாதகல் மக்கள் அனைவரையும் இந்நிகழ்வில் பங்குபற்றி சிறப்பிக்குமாறு இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூட நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.
விழா மண்டபத்தின் விலாசம் :
Salle Champ-des-Oiseaux
Rue du Champs des Oiseaux,
Marly-le-Roi 78160
அன்றைய தினம் திரு ஞானசீலன் அவர்களின் வேண்டுகோளிற்கமைய, சமய உணர்வலைகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டி நடாத்தப்பட்டு வெற்றி பெறுவோரிற்கு 1ஆவது, 2ஆவது பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள்.
பேச்சுப் போட்டியின் தலைப்பு :
« ஆறுமுகநாவலர் »
[அவர்களின் தோற்றம், பணி எனும் விடயம் அடங்கிய 3 நிமிடப் பேச்சு]
பேசும் மாணவர்களிடையே எதிர்பார்க்கப்படும் விடயங்கள் :
1-நேரம் கடைப்பிடித்தல்
2-பேசும் தொனி
3- உச்சரிப்பு
- மனப்பாடம் செய்து பேசுதல் விரும்பத்தக்கது.
- கைகளில் தகவல்கள் வைத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.
இப் போட்டியில் மாதகல் மக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆனால் மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
நடுவர்களது தீர்ப்பே இறுதி முடிவு எனவும் அறியத் தருகின்றோம்.
தொடர்பு கொள்ளும் அலைபேசி இலக்கங்கள் : 06-11-05-30-98
வெற்றியடைபவர்களிற்கு பரிசில்களை வழங்குபவர் : வைஸ்ணவி கடை உரிமையாளர் திரு ஞானசீலன் அவர்கள்
இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக் கூடம்
பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கம்