நன்றி நவிலல்
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வத்தளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி அவர்களின் நன்றி நவிலல்.அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
இங்ஙனம்,
குடும்பத்தினர்
“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே
என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்”
-யோவான் 11:25
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், வத்தளையை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி பெர்னான்டோ மேரி அருட்பிரகாசி அவர்கள் 02-09-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அமிர்தநாதர் அந்தோனியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செபஸ்தியாம்பிள்ளை சூசானம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அன்ரனி பெர்னான்டோ அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அருட்சகோதரி மேரி ஜோசேப்பின், மேரி மலர் றோசா, பிரகாசநாதர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரி பிலோமினா(ராஜேஸ்வரி- இலங்கை), இருதயநேசன்(அருமை- லண்டன்), ஜோசப்நாயகம்(மதுரம்- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஜெனட் புஸ்பானந்தரூபி(சகாயராணி- லண்டன்), விக்னேஸ்வரி(ஜேர்மனி), காலஞ்சென்ற செல்வநாதர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜான் டிலக்ஸ்ஷன்(ஜேர்மனி), அன்ரன்ராஜ்(றொக்ஷன்- லண்டன்), றெமிங்ரன்(ஜேர்மனி), அன்ரனி நிஷாந்த்(இலங்கை), டியனா(ஜேர்மனி), மேரி தர்சிகா(லண்டன்), ஜோடினிக்கா(இலங்கை), ஸ்ரெபான்(லண்டன்), ரஜிக்கா(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஏற்றியன்(லண்டன்) அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் No. 162 EW Perera Mawatha, Colombo 00800, Sri Lanka எனும் முகவரியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94775727982
- Mobile : +447984742283
- Mobile : +491627758346
- Mobile : +94758014943
கருத்துகள்
கருத்துரையிடுக