தேசிய மறைக்கல்வி வாரத்தின் இரண்டாம் நாள் நிகழ்வாக 17.09.2024 அன்று மாதகல் - சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தில் மறைக்கல்வி வார்த்தை கொண்டாடும் விதமாக விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்தும் மோசேயின் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
அனைத்து உலகமும் தேசிய மறைக்கல்வி வாரத்தை கொண்டாடும் வாரத்தில் மாதகல் - சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் மறைக்கல்வி மாணவர்களும் மறை ஆசிரியர்களும் இணைந்து பங்குத்தந்தையின் வழிகாட்டலுடன் 16.09.2024 அன்று 1ம் நாளில் தூய்மையாய் வாழ்வோம் என்ற மையக் கருத்தோடு எம் மனங்களையும் தூய்மையாக்கி ஆலயத்தையும் சுத்தப்படுத்திய நாளின் பதிவுகள்..
கருத்துகள்
கருத்துரையிடுக