UCMAS கற்கைநெறியின் (ABACAS) பட்டமளிப்பு விழாவில் மாதகலைச் சேர்ந்த மாணவி சிறப்பு சித்தி..!

UCMAS கற்கைநெறியின் (ABACAS) பட்டமளிப்பு விழாவில் மாதகலைப் பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வருபவரும் எமது மாதகல்.கொம் இணையத்தளத்தின் உரிமையாளருமாகிய நற்குணசிங்கம் செல்வக்குமாரின் மகள், மாணவி செல்வகுமார் வேணியா சிறப்பு சித்தி பெற்றுள்ளார்.
இறுதி பரீட்சையில் 30 கேள்விகளை வெறும் ஐந்து நிமிடத்தில் செய்து முடித்தார். செய்த 30 கேள்விக்கும் சரியான பதில் அளித்ததன் மூலம் "Distinction" பெறுபேற்றை பெற்றுள்ளார்.
10.08.2024 அன்று மாலை கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்ற UCMAS கற்கைநெறியின் (ABACAS) பட்டமளிப்பு விழாவில் இவரிற்கான பாராட்டுக்கள் வழங்கப்பட்டன.
இப் போட்டியில் வெற்றியீட்டிய மாணவி செல்வகுமார் வேணியா அவர்களுக்கு எமது மாதகல்.இணையம் சார்பாக பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கும் அதேவேளை, இம் மாணவியை நெறிப்படுத்திய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கும் எமது நன்றிகள்.












 

கருத்துகள்