மாதகல் - சகாயபுரம் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் இளையோர் கழகம் ஆரம்பிக்கப்பட்டு 15ஆம் ஆண்டின் நிறைவில் மேற்படி ஆலய இளையோர் கழகத்தினரால் 04.08.2024 அன்று மாலை 3:30 மணிக்கு மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலய முன்றலில் தலைவர் யஸ்ரிபன் தலமையில் கலாசார விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்நிகழ்வின் காப்பாளராக அன்புக்கும் பெரும் மதிப்புக்குமுரிய மாரீசன்கூடல் பங்குத்தந்தை அருட்பணி G. ஞானரூபன் அடிகளாரும் ,பிரதம விருந்தினராக உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்பணி A. ஜோன் அலோசியஸ் அடிகளாரும், சிறப்பு விருந்தினராக சென்லூட்ஸ் விளையாட்டுக்கழக தலைவர் P. அன்ரன் பாலதாஸ் அவர்களும், விளையாட்டு நிகழ்வுகள் அனைத்திற்கும் நடுவர்களாக காரைநகர் பிரதேச செயலகத்தின் கணக்காய்வாளரும், விளையாட்டு வீரருமான பத்மநிதர்சன் அவர்களும், புனித லூர்து அன்னை ஆலயத்தின் இளையோர் கழக உறுப்பினராகிய விதுஷன் அவர்களும் விளையாட்டு விழாவில் கலந்து சிறப்பித்தார்கள்.
தொடர்ந்து பற்பல விளையாட்டுக்கள் நடைபெற்று வெற்றி பெற்ற வீர, வீராங்கனைகளுக்கு பெறுமதியான பரிசில்களும், பசுமையை பாதுகாத்து இயற்கையுடன் இணைவோம் என்பதை ஊக்கப்படுத்தும் வகையில் பலன்தரும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.































































மாதகல் புனித சதாசகாய அன்னை ஆலயத்தின் இளையோர் கழகம் ஆரம்பிக்கப்பட்டு 15ஆம் ஆண்டை நிறைவு செய்யும் இவ்வாண்டில். பங்குத்தந்தை G. ஞானறூபன் அடிகளாரின் வழிகாட்டுதலில் 03.08.2024 அன்று மின் ஒளியில் நடைபெற்ற விளையாட்டுக்களின் சில பதிவுகள்..