மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் பெருமையுடன் நடாத்தும் "மாதகல் பெரும் சமர்" என வர்ணிக்கப்படும் வீரா மென்பந்து கிரிக்கட் (காணொளி இணைப்பு)..!

மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் பெருமையுடன் நடாத்தும் "மாதகல் பெரும் சமர்"  என வர்ணிக்கப்படும் வீரா மென்பந்து  கிரிக்கட் சுற்றுத் தொடரின் 5ஆவது வருடத்தின்  இறுதிப் போட்டியானது கடந்த 14-07-2024 ஞாயிற்றுக்கிழமை  இடம் பெற்றது.

2024ஆம் ஆண்டின் வீரா வெற்றிக்கிண்ணத்தினை உரும்பிராய் ஈகிள்ஸ் அணியினர் மிகத் திறமையாக விளையாடி வெற்றி கொண்டனர். அத்துடன் 50,000ரூபா காசோலையும் வழங்கப்பட்டது.


இரண்டாவதாக வெற்றி பெற்ற மல்லாகம் ஸ்ரார் அணியினரிற்கும் வீரா வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டதுடன் 20,000ரூபா காசோலையும் வழங்கப்பட்டது.

 அது தொடர்பான சில பதிவுகள்🏏🎖🏆🏅மாதகல் விநாயகர் விளையாட்டுக்கழகம் வருடாவருடம் பெருமையுடன் நடாத்தும் "மாதகல் பெரும் சமர்"  என வர்ணிக்கப்படும் வீரா மென்பந்து  கிரிக்கட் சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டியானது எதிர்வரும் 14/07/2024 (ஞாயிற்றுக்கிழமை ) இடம்பெறவுள்ளது.

16 அணிகள் பங்குபற்றிய சுற்றுத்தொடரில் பலம் பொருந்திய இரு அணிகள் இறுதிக்கு தேர்வாகியுள்ளன.

இறுதிப்போட்டியில் மல்லாகம் ஸ்ரார்
 அணியினரை எதிர்த்து உரும்பிராய் ஈகிள்ஸ் அணியினர் விளையாடவுள்ளனர்.

இறுதிப் போட்டியை கண்டுகளிக்க அனைத்து உள்ளங்களையும் அன்புடன்  அழைக்கின்றோம்.

 

கருத்துகள்