யாழ். மாதகல் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை பூபாலசிங்கம் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: அபரபக்க சதுர்த்தசி (16-07-2023)
ஆண்டு பன்னிரெண்டு ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
அம்மாவின் பிரிவுத்துயர் தாழாமல்
உங்கள் திருமண தினத்தன்று
அக்கினியில் நீங்கள் செய்து கொண்ட
சத்தியம் தான் காரணமோ?
அவரோடு நீங்களும் சென்றது ஏன் தொடர்ந்து?
ஊர் விட்டு வந்து நம் சொந்த ஊருக்கு
திரும்ப முடியாமல் தவித்த தவிப்பும்
இப்போ ஊருக்கு போகு நிலை வந்தும்
போவதற்கு நீங்கள் இல்லையே அப்பா....
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
நீ இறையடி எய்து பன்னிரென்டு ஆண்டுகள்
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில் துடிக்கிறோம்
ஏன் மறைந்தாய்? எங்கள் விடிவெள்ளியே!
கடமைகள் நிறைவு கண்டு – இன்று
காலமோ பன்னிரெண்டு ஆனது – என்று
போறது கதி தான் மோட்சம்
பெற்றது நீங்கள் எனினும்
பாசத்தில் பரிதவித்தோம்
பரமமே தகுமோ ஐயா
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
கருத்துகள்
கருத்துரையிடுக