மாதகல் புனித தோமையார் ஆலய வருடாந்த பெருவிழா - 2024..!

புனிதரின் பெருவிழாவிற்கான முதல் நாளாகிய 02.07.2024 செவ்வாய்க்கிழமை அன்று மாலை 05.00 நடைபெற்ற நற்கருணை விழாத் திருப்பலி மாதகல் பங்குத்தந்தை றோய்பேடினன் அடிகளாரின் வழிநடத்தலில் மாதகல் மண்ணின் புதிய குருமணி அருட்தந்தை பீ.அ.கமல்ராஜ் அடிகளாரின் தலைமையில் இடம்பெற்றது. தொடர்ந்து நற்கருணை வழிபாடும் நற்கருணைப் பவனியும், நற்கருணை ஆசீரும் இடம்பெற்றது.

புனிதரின் பெருவிழாவிற்கான ஆயத்த நவநாள் வழிபாடுகள் பங்குத்தந்தை றோய்பேடினன் அடிகளாரின் வழிநடத்துதலில் 24.06.2024 திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு திருச்செபமாலையின் பின்னர் பங்குத்தந்தை அவர்களால் புனிதரின் கொடியேற்றப்பட்டு தொடர்ந்து திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
புனித தோமையார் வழியாக ஆண்டவன் அருளைப் பெற்று இறையுறவில் வளமுடன் வாழ பக்தர்களை அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.
1) 24.06.2024 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 5.00 மணிக்கு கொடியேற்றத்துடன் திருப்பலி
திருச்செபமாலையுடன் திருப்பலி ஆரம்பமாகும்.
2) தினமும் மாலை 5.00 மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகும்.
3) 02.07.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெறும்.
4) 03.07.2024 ஆம் திகதி புதன்கிழமை காலை 7.00 மணிக்கு திருநாள் திருப்பலி நடைபெறும்.
பங்குத்தந்தை,
புனித தோமையார் ஆலய மக்கள்,
மாதகல்.
காெடியேற்றத்திருப்பலி, நற்கருணை விழா மற்றும் புனிதரின் திருநாள் திருப்பலி ஆகியன எமது உத்தியோகபூர்வ யூடியுப் (mathagal) தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.
புனிதரின் பக்தர்கள் அனைவரும் நேரலையாக திருப்பலியினைக் கண்டுகளித்து புனிதரின் பரிந்துரை வழியாக இறைவனின் ஆசீரைப் பெற்றுவாழ அழைக்கின்றோம்.
 

கருத்துகள்