மாதகல் புனித அந்தோனியார் ஆலய 2024ம் ஆண்டிற்கான வருடாந்த திருவிழாவின் தொடக்க நாளாகிய 04.06.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு திருச்செபமாலையின் பின் கொடியேற்றத்துடன் திருப்பலி ஆரம்பமாகியது.

தினமும் மாலை 5.00 மணிக்கு திருச்செபமாலையுடன் நவநாள் வழிபாடுகள் ஆரம்பமாகும்.
12.06.2024 ஆம் திகதி புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் ஆசீரும் இடம்பெறும்.
13.06.2024ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6.00 மணிக்கு திருவிழாத் திருப்பலி நடைபெறும்.
புனிதரின் பரிந்துரை வழியாக இறைவனின் ஆசீரைப் பெற்று வாழ அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.

 

கருத்துகள்