மாதகல் கடலில் கரையொதுங்கிய படகு - தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் மீட்பு


யாழ்ப்பாணம் மாதகல் கடற்பகுதியில் படகொன்றில் கரையொதுங்கிய தமிழக கடற்தொழிலாளர்கள் மூவர் இளவாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதகல் புளியந்தரை கடற்கரை பகுதியில் தமிழக படகொன்று மூன்று கடற்தொழிலாளர்களுடன் கரையொதுங்கியுள்ளது. அவர்களை அப்பகுதி கடற்தொழிலாளர்கள் மீட்டதுடன், சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கினார்கள்.

தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு வந்த இளவாலை பொலிஸார் தமிழக கடற்தொழிலாளர்கள் மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த போது , படகு பழுதடைந்தமையாலையே கரையொதுங்கியதாக தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மூவரையும் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளத்துடன் , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மூலம் - தினகரன் 

கருத்துகள்