யா/ மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் மாதகல் மண்ணின் புதிய குருமணியுமான அருட்தந்தை பீ. அ. கமல்ராஜ் அடிகளாரால் யா/ மாதகல் சென். ஜோசப் மகா வித்தியாலயத்தில் தனது நன்றித் திருப்பலியை ஒப்புக்காெடுத்தார்.
திருப்பலியைத் தாெடர்ந்து பாடசாலையின் பழைய மாணவராகிய அருட்தந்தை அடிகளார் பாடசாலை சமூகத்தினரால் கெளரவிக்கப்பட்டார்.
அருட்தந்தை பீ. அ. கமல்ராஜ் அடிகளார் 13.04.2024 சனிக்கிழமை அன்று குருத்துவ அபிஷேகம் செய்யப்பட்டதும் 14.04.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது முதல் நன்றித் திருப்பலியை மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் ஒப்புக்காெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.