மாதகல் புனித சூசையப்பர் ஆலய பெருவிழா - 2024

மாதகல் புனித சூசையப்பர் ஆலய பெருவிழாவானது 01.05.2024 புதன்கிழமை அன்று நடைபெற்றது.
பெருவிழாத் திருப்பலியைத் தொடர்ந்து தாெழில் உபகரணங்கள், கடல் ஆகியன ஆசீர்வதிக்கப்பட்டது.
இதன் சில பதிவுகள்...


மாதகல் புனித சூசையப்பர் ஆலய பெருவிழாவின் ஆயத்த நாளாகிய 30.04.2024 செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு பொன்னாலை - பருத்தித்துறை பிரதான வீதியில் அமைந்துள்ள புனித சூசையப்பர் திருச்சொருபத்திலிருந்து மாதகல் சம்பில்துறை புனித சூசையப்பர் ஆலயத்தை நோக்கிய புனிதரின் திருச்சொரூப பவனியும், தாெடர்ந்து பங்குத்தந்தை அவர்களால் புனிதரின் திருக்கொடி ஏற்றி வைக்கப்பட்டு பின்னர் திருப்பலியும் நற்கருணை வழிபாடும், நற்கருணைப் பவனியும் இறுதியில் நற்கருணை ஆசீரும் இடம்பெற்றது.
 

கருத்துகள்