மாதகல் சம்பில்துறை கடற்கரைப்பகுதியில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் செயற்பாடு இடம்பெற்றது...!

தேசிய சுற்றாடல் தினத்தையொட்டி சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தால் மாதகல் சம்பில்துறை கடற்கரைப்பகுதியில் கடற்கரையோரம் சுத்தப்படுத்தல் செயற்பாடானது 31.05.2024 அன்று இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கடற்படையினர், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை உத்தியோகத்தர்கள், கரையோர பாதுகாப்புத்திணைக்கள உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபை ஊழியர்கள், கடற்றொழில் அமைப்புக்கள், கடற்றொழிலாளர்கள், சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

 

கருத்துகள்