யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திருமதி.சுரேகா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்..!


 யா/ மாதகல் விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் புதிய அதிபராக திருமதி.சுரேகா அவர்கள் 03.04.2024 அன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

புதிய அதிபர் அவர்களை பாடசாலை சமூகம் சார்பில் அன்புடன் வரவேற்கும் அதேவேளை, பாடசாலையின் முன்னேற்றத்திற்காக  நீங்கள் முன்னெடுக்கும் பணிகள் சிறப்பாக அமைய அரசடி சித்தி விநாயகரை பிரார்த்தனை செய்கின்றோம்.

அதேவேளை கடந்த  வருடங்களாக எமது பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய திருமதி.சுலோசனா அவர்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிக்கும் அதேவேளை, விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் புதிய அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ள அவருக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக''

கருத்துகள்