100ஆவது ஆண்டு யூபிலி விழாவிற்கு ஆயத்தமாக மருதமடு அன்னையின் திருச்சுரூபம் யாழ்.மறைமாவட்டத்தின் மாதகல் பங்கின் புனித தோமையார் ஆலய திருப்பயண நிகழ்வுகள் (காணொளி இணைப்பு)..!


மருதமடு அன்னையே வருக!
மாதகல் மண்ணிற்கு இறையாசீர் தருக!!
எம் மாதகல் கிராமத்திற்கு கானகச் செல்வி மருதமடு மாதாவின் வருகையின் போது அன்னையின் பக்தர்கள் அனைவரும் மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு வருகைதந்து அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்று வளமுடன் வாழுங்கள்.

மருதமடு அன்னைக்கு முடி சூட்டப்பட்ட நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்னையவளின் மாதகல் பங்கிற்கான திருப்பயணம்
மாதகப் பங்குத்தந்தை அருட்பணி செ.றோய் பேடினன் அவர்களின் உள்ளத்தில் இருந்து ...
மாதகல் பங்கிற்கு மருதமடு அன்னையின் திருச்சுரூபம் எடுத்து வருகின்ற மகத்துவமான நாளான 15.04.2024 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு மாதகல் பங்கில் வாழும் அனைத்து இறைமக்களும் மருதமடு மாதாவின் பக்தர்களும் மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு வருகைதந்து அன்னையை மகிமைப்படுத்தி அன்னை வழியாக ஆண்டவரின் நிறைவான ஆசீர்வாதங்களைப் பெற்று உங்கள் வாழ்வை வளம்படுத்த அன்புடன் அழைத்து நிற்கின்றேன்.
இறை இயேசுவில் அன்புள்ள,
அருட்பணி.செ.றோய் பேடினன்,
பங்குத்தந்தை, மாதகல்.
எம் மாதகல் கிராமத்திற்கு கானகச் செல்வி மருதமடு மாதாவின் வருகையின் போது அன்னையின் பக்தர்கள் அனைவரும் மாதகல் புனித தோமையார் ஆலயத்திற்கு வருகைதந்து அன்னையின் ஆசீர்வாதத்தைப் பெற்று வளமுடன் வாழுங்கள்.
மருதமடு அன்னையின் திருப்பயண நிகழ்வுகள் எமது உத்தியோகபூர்வ யூடியுப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

மருதமடு அன்னையின் முடிசூட்டு விழாவின் 100ஆவது ஆண்டு யூபிலி விழாவிற்கு ஆயத்தமாக மருதமடு அன்னையின் திருச்சுரூபம் யாழ்.மறைமாவட்டத்தின் மாதகல் பங்கின் புனித தோமையார் ஆலயத்திற்கு திருப்பயணம் காலம் - 15.04.2024 திங்கட்கிழமை காலை 09.30 மணிமுதல் நண்பகல் 01.00 மணிவரை மருதமடு அன்னையின் திருப்பயண நிகழ்வுகள் எமது உத்தியோகபூர்வ யூடியுப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

கருத்துகள்